விமானம் தாமதமானால் இழப்பீடு பெறுவது எப்படி?: இதோ ஓர் எளிய வழி

Report Print Peterson Peterson in ஆப்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

விமானம் தாமதமானால் அதற்கான இழப்பீட்டு தொகையை பெறுவதற்கு வசதியாக தற்போது ஒரு புதிய மொபைல் அப்ளிகேஷன் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானிய நாட்டில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அந்த அப்ளிகேஷனின் பெயர் airFair version 1.1 ஆகும்.

ஐரோப்பிய நாடுகளுக்குள் மேற்கொள்ளப்படும் பயணங்களில் விமானம் தாமதமாக புறப்பட்டால் அல்லது சேர வேண்டிய இடத்திற்கு தாமதமாக சென்றால், இந்த அப்ளிகேஷன் மூலம் இழப்பீடு கிடைக்க வாய்ப்புள்ளதா என்பதை பயணிகள் உறுதி செய்துக்கொள்ளலாம்.

அதாவது, ஐரோப்பிய நாடுகளுக்குள் கடந்த 6 ஆண்டுகளில் 3 மணி நேரத்திற்கு மேல் நீங்கள் பயணித்த விமானம் தாமதமாகிருந்தால், இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி இழப்பீட்டு தொகையை உறுதி செய்துக்கொள்ளலாம்.

இதனை அறிந்துக்கொள்ள பயணிகள் தங்களுடைய முன்பதிவு குறிப்பு எண்(booking reference number) அல்லது விமானத்தின் எண்(flight number) ஆகிய தகவல்களை அப்ளிகேஷனில் பதிவு செய்து இழப்பீடு கிடைக்குமா என்பதை உறுதி செய்துக்கொள்ளலாம்.

இந்த இரண்டு தகவல்களும் இல்லை எனில், குறிப்பிட்ட விமானத்தில் நீங்கள் பயணம் செய்த திகதி மற்றும் அந்த விமானம் சென்றடைந்த விமான நிலையத்தின் பெயரை பதிவு செய்தும் தெரிந்துக்கொள்ளலாம்.

இது வசதி குறித்து airFair-ன் நிர்வாக இயக்குனரான ஸ்டீவன் பெல் பேசுகையில், ‘விமானம் தாமதமானால் அதற்கான இழப்பீடு கிடைக்குமா என்பது குறித்து பெரும்பாலான பயணிகளுக்கு தெரியவில்லை.

இவ்வாறு தாமதமான விமானத்தில் பயணம் செய்த 10 பயணிகளில் 4 பேர் மட்டுமே இழப்பீட்டு தொகையை கேட்டு விண்ணப்பம் செய்கின்றனர்.

அதே சமயம், குறிப்பிட்ட விமான நிறுவனத்திடம் நேரடியாக இழப்பீடு கேட்டு விண்ணப்பம் செய்வதன் மூலம் காலதாமதம் அதிகம் ஆகிறது.

பயணிகளின் இந்த சிரமத்தை குறைக்கும் வகையில் தான் தற்போது airFair அப்ளிகேஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், விரைவில் இந்த அப்ளிகேஷனில் புதிய அப்டேட்கள் வரவுள்ளதாகவும் ஸ்டீவன் பெல் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments