பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய கூகுளின் செயற்பாடு

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

கூகுள் நிறுவனமானது தான் வடிவமைத்த அன்ரோயிட் இயங்குதளங்களில் பயன்படுத்தக்கூடிய அப்பிளிக்கேஷன்களை கூகுள் பிளே ஸ்டோரின் ஊடாக வழங்கி வருகின்றது.

இதில் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டிய அப்பிளிக்கேஷன்களும், இலவசமாகப் பெற்றுக்கொள்ள வேண்டிய அப்பிளிக்கேஷன்களும் காணப்படுகின்றன.

இந்நிலையில் கடந்த மாதம் கூகுள் பிளே ஸ்டோரில் புதிய வசதி ஒன்றினை கூகுள் நிறுவனம் வழங்கியிருந்தது.

Free App of the Week எனும் இவ் வசதியின் ஊடாக கட்டணம் செலுத்திப் பெற்றுக்கொள்ள வேண்டியதும் குறித்த காலத்தில் மட்டும் இலவசமாக பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் கிடைக்கும் அப்பிளிக்கேஷன்களை விரைவாகவும், இலகுவாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.

தற்போது இவ் வசதியினை எவ்வித காரணமோ அல்லது முன் அறிவித்தலோ இன்றி கூகுள் நிறுவனம் நிறுத்தியுள்ளது.

இதன் காரணமாக மேற்கண்ட வகையில் அரிதாகக் கிடைக்கக்கூடிய அப்பிளிக்கேஷன்களைப் பெற்றுக்கொள்வதில் பயனர்கள் அசௌகரியத்தினை எதிர்நோக்கியுள்ளனர்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments