ஆப்பிளின் கிளிப்ஸ் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
0Shares
0Shares
lankasri.com

ஆப்பிள் நிறுவனம் கடந்த மாதம் கிளிப்ஸ் எனும் வீடியோ எடிட்டிங் அப்பிளிக்கேஷன் ஒன்றினை அறிமுகம் செய்திருந்தது.

பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள இந்த அப்பிளிக்கேஷன் ஆனது அறிமுகம் செய்யப்பட்டு சில நாட்களிலேயே 1 மில்லியன் தரவிறக்கங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது குறித்த அப்பிளிக்கேஷனுக்கான புதிய பதிப்பு ஒன்றினை அறிமுகம் செய்ய ஆப்பிள் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இப் பதிப்பில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்போதே டைட்டிலை எடிட் செய்யக்கூடிய வசதி உள்ளடக்கப்பட்டுள்ளது.

இது தவிர முன்னைய பதிப்பில் காணப்பட்ட குறைபாடுகள் நீக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது.

இப் புதிய பதிப்பினை ஆப்பிளின் ஐடியூன்ஸ் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments