வாட்ஸ் அப்பில் இவ்வளவு மோசடிகள் உள்ளதா? உஷார்

Report Print Printha in ஆப்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

அனைவருக்கும் சிறந்த பயன்பாட்டில் இருக்கும் வாட்ஸ் அப்பில், அடிக்கடி ஏற்படும் வாட்ஸ் அப் மோசடிகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

வாட்ஸ்அப் பயன்பாட்டில் உள்ள மோசடிகள் என்ன?

  • அடிக்கடி வாட்ஸ்அப்பில், இந்த வவுச்சரை பயன்படுத்தி ரூ.100 பெறுங்கள் என்ற குறுஞ்செய்தியை காண முடியும். இது போன்ற செய்திகள் வந்தால், அதை கிளிக் செய்யக் கூடாது.

  • வாட்ஸ்அப் முடிவுக்கு வருகிறது என்ற குறுஞ்செய்தி பல ஆண்டுகளாக சமூக ஊடக அரங்கு முழுவதும் உலா வரும். ஆனால் அது ஒரு மோசடி செய்தியாகும்.

  • வாட்ஸ்அப்பில் கோல்ட் பதிப்பை வெளியிட்டு அதை மேம்படுத்திக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்து, அதனுடன் ஒரு இணைப்பும் வழங்கப்படும் அதன் மூலம் அவர்கள் அனைத்து வகையான வாட்ஸ்அப் அம்சங்களையும் அனுபவிக்க முடியும் என்று கூறப்பட்டிருக்கும். அது போன்றவை சமூக நெட்வொர்க் மோசடிகள்.

  • சில ஆப்ஸ்கள் உங்கள் வாட்ஸ்அப் நண்பரை உளவு பார்க்க அனுமதிக்கும் என்று கூறப்பட்டிருக்கும். ஆனால் அவைகள் எல்லாமே தீம்பொருள். இதனால் உங்கள் ஸ்மார்ட்போனில் வைரஸ் தான் அதிகமாகும்.

  • வாட்ஸ்அப்பில் உங்கள் மொபைல் அல்ட்ரா லைட் வைஃபைக்கு ஆதரவு அளிக்கிறது. இதனால் நீங்கள் இலவசமாக வாட்ஸ்அப் பயன்படுத்தலாம் என்ற செய்தி வந்தால், அது 100% போலியான மோசடிகள்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments