விண்டோஸ் ஸ்டோரில் இனி ஐடியூனை பெற்றுக்கொள்ளலாம்!

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

ஆப்பிள் நிறுவனம் வழங்கி வரும் ஐடியூன் சேவையை அறிந்திராதவர்கள் இருக்கவே முடியாது.

அந்த அளவிற்கு உலகப் பிரபல்யம் பெற்ற ஒன்லைன் மியூசிக் சேவையாகும்.

advertisement

இங்கு பல்வேறு மொழிகளிலான பாடல்கள் கிடைக்கப்பெறுகின்றன.

இந்த சேவையினை நீண்ட காலமாக ஆப்பிள் சாதனங்களில் மட்டுமே பயன்படுத்தக்கூடியதாக இருந்தது.

இதற்காக அப்பிளிக்கேஷன்களும் உருவாக்கப்பட்டிருந்தன.

எனினும் அவற்றினை விண்டோஸ் இயங்குதளங்களில் பயன்படுத்த முடியாது இருந்தது.

ஆனால் தற்போது விண்டோஸ் ஸ்ரோரின் ஊடாக ஐடியூன் அப்பிளிக்கேஷனை ( iTunes Apps) அறிமுகம் செய்ய தீர்மானித்துள்ளதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்காக ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து பணிபுரிவதாகவும் தெரிவித்துள்ளது.

இதனால் விண்டோஸ் பாவனையாளர்களுக்கும் இனி கொண்டாட்டம் தான்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments