அப்பிளிக்கேஷன்களுக்காக ஆப்பிள் செலவிட்ட தொகை எவ்வளவு தெரியுமா?

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

தனக்கென ஒரு தனித்துவத்தைக் கொண்டு கணனி, மொபைல் சாதன சந்தையில் முன்னணியில் திகழும் ஆப்பிள் நிறுவனம் அவற்றுக்கான அப்பிளிக்கேஷன்களையும் சொந்தமாகவே வடிவமைக்கின்றது.

அப்பிளிக்கேஷன்களை வடிவமைப்பதற்காக உலகின் பல்வேறு நாடுகளிலும் ஆப்ஸ் வடிவமைப்பாளர்களை கொண்டிருக்கின்றது.

advertisement

இந்நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை 2017 ஆம் ஆண்டுக்கான Worldwide Developer Conference நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது.

இதேவேளை 2008 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து ஆப் ஸ்டோர் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

அன்றிலிருந்து இன்றுவரை ஆப்ஸ் தயாரிப்பிற்காக சுமார் 70 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த 12 மாதங்களில் அப்பிளிக்கேஷன்களை தரவிறக்கம் செய்வது 70 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments