வர்த்தக ரீதியான புதிய கணக்கினை அறிமுகம் செய்கின்றது வாட்ஸ் ஆப்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
0Shares
0Shares
Cineulagam.com

வாட்ஸ் ஆப் ஆனது இன்று பல மில்லியன் பயனர்களைக் கொண்ட முன்னணி அப்பிளிக்கேஷனாக காணப்படுகின்றது.

இதன் சேவையானது முற்றிலும் இலவசமாகவே பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

எனினும் வியாபார ரீதியான கணக்கினையும் அறிமுகம் செய்ய அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி முன்னணி வர்த்தக நிறுவனங்கள் தமது பெயரில் வாட்ஸ் ஆப் கணக்குகளை உருவாக்கி வாடிக்கையாளர்களுடன் நேரடியாக தொடர்பில் இருக்க முடியும்.

அதே நேரம் வாடிக்கையாளர்களும் போலியான கணக்குகளை கண்டு ஏமாராமல் இருக்க உறுதிப்படுத்தப்பட்ட (Verified) கணக்குகளை குறித்த வர்த்தக நிறுவனங்களுக்கு வாட்ஸ் ஆப் வழங்கும்.

இதற்காக சில தொகை பணத்தினை கட்டணமாகவும் வாட்ஸ் ஆப் அறவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்