பேஸ்புக் மெசஞ்சரில் ஆப்பிளின் வசதி

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

ஆப்பிள் நிறுவனத்தினால் வழங்கப்படும் பிரபலமான சேவைகளுள் Apple Music சேவையும் ஒன்றாகும்.

இச் சேவையானது தற்போது பேஸ்புக் மெசஞ்சரில் உள்ளடக்கப்படவுள்ளது.

இதனால் நேரடியாக பேஸ்புக் மெசஞ்சரில் இருந்தே ஆப்பிள் மியூசிக் பாடல்களை கேட்க முடிவதுடன், நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் முடியும்.

எனினும் இவ் வசதியினைப் பெறுவதற்கு ஆப்பிள் மியூசிக் சேவையை சப்ஸ்கிரைப் செய்திருக்க வேண்டும்.

குழுவான சட்டிங் அல்லது தனி நபருடனான சட்டிங் செய்யும் பகுதியில் உள்ள (+) அடையாளத்தினை கிளிக் செய்து ஆப்பிள் மியூசிக் சட் நீட்சியை நிறுவிக்கொள்ள முடியும்.

அத்துடன் ஆப்பிள் மியூசிக் சேவையை சப்ஸ்கிரைப் செய்யாதவர்கள் 30 செக்கன்களுக்கு ஒரு ஒலி அல்லது பாடலை கேட்க முடியும்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்