உலகளவில் செயலிழந்த வாட்ஸ்அப் சேவை

Report Print Kabilan in ஆப்ஸ்
115Shares
115Shares
lankasrimarket.com

உலகம் முழுதும் அதிகளவு பயனாளர்கள் தன் வசம் கொண்டுள்ள வாட்ஸ் அப் இன்று காலை செயலழிந்து சிறிது நேரத்தில் செயல்படத் தொடங்கியது.

உலக அளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் போன் சேவை வாட்ஸ்அப் ஆகும். பேஸ்புக் நிறுவனம் இதனை வாங்கியதிலிருந்து சில தடங்கல்களை சந்தித்து வருகிறது வாட்ஸ்அப்.

இன்று காலை வாட்ஸ் அப் சேவையானது திடீரென செயல்படாமல் போனது. இதனால், வாட்ஸ் அப் பயனாளிகள் தங்களின் புகாரினை, ட்விட்டர் பக்கத்தில் #Whatsappdown என்னும் ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வந்ததால், குறையை சரி செய்யும் பணி நடந்து வருவதாக வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்தது.

அதன்படி சிறிது நேரத்தில் வாட்ஸ் அப் சேவை செயல்படத் தொடங்கியது, இது முதல்முறையல்ல, இதற்கு முன்னரும் பல சமயங்களில் வாட்ஸ் அப் முடங்கியது.

கடந்த நவம்பர் 3ஆம் திகதியும் இதே போல வாட்ஸ் அப் செயல்படாமல் போனது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்