வாட்ஸ் அப்பில் இனி வணிகமும் செய்யலாம்

Report Print Gokulan Gokulan in ஆப்ஸ்
90Shares
90Shares
lankasrimarket.com

இன்று ஒருவரை எளிதாக தொடர்பு கொள்ள அனைவரும் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. சிறியவர்களிடம் இருந்து பெரியவர்கள் வரை வாட்ஸ் அப் பிரபலமாக உள்ளது.

பொதுவாக அனைவரும் பேசிக் கொள்ள மட்டும் பயன்பட்டு வந்த இந்த செயலியில், தற்போது வணிக நிறுவனங்களும் பயன்படுத்தும் வகையில் வாட்ஸ் அப் பிசினஸ் என்ற செயலி அறிமுகமாகியுள்ளது.

இந்த செயலியில் ஆட்டோ ரெஸ்பான்ஸ் பிசினஸ் ப்ரொஃபைல்களை உருவாக்கலாம். இந்த ஒரே செயலியைக் கொண்டு, தனி நபர் கணக்கு மற்றும் வணிகக் கணக்கு என இரு வகையையும் தனித்தனியாக பயன்படுத்த முடியும்.

பயனாளி விரும்பினால் மட்டுமே அவர் தேர்ந்தெடுக்கும் குறிப்பிட்ட வணிகம் தொடர்பான செய்திகளைப் பெறுவார். இல்லையெனில் எப்போதும் போல் வாட்ஸ் அப்பை சாதாரணமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

அனைவரும் அறிந்த மற்றொரு தளமாக இருக்கும் பேஸ்புக் தன் பயனாளிகளுக்காக ஸ்னூஸ் என்ற வசதியைத் தொடங்கியுள்ளது.

தேவையற்ற மற்றும் விரும்பத்தகாத பதிவுகளை இது தடுக்கும். ஒரு நாள் முதல் முப்பது நாள் வரை தேவையற்ற பதிவுகளை ஸ்னூஸ் மூலம் தவிர்க்கலாம்.

குரூப்களில் வரும் தேவையற்ற நோடிஃபிகேஷன்களையும் இந்த வசதி மூலம் தடுக்கலாம்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்