பேஸ்புக் ஊடாக இனி எவரையும் துன்புறுத்த முடியாது: வந்துவிட்டது புதிய வசதி

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
145Shares
145Shares
lankasrimarket.com

சம காலத்தில் இளைஞர், யுவதிகள் மத்தியில் ஏராளமான பிரச்சினைகள் ஏற்படுவதற்கு பேஸ்புக் வலைத்தளமும் ஒரு காரணமாக அமைகின்றது.

இதன் ஊடாக போலி கணக்குகளை உருவாக்கி எதிராளிகளை பழிவாங்குதல், அச்சுறுத்தல் போன்ற சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

எனினும் இதுவரை காலமும் இப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண முடியாமல் இருந்தது.

இந்நிலையில் கடந்த வாரம் பேஸ்புக் நிறுவனம் இரு புதிய டூல்களை அறிமுகம் செய்துள்ளது.

இவை போலி கணக்குகளை கண்டறிவதற்கும், ஒன்லைன் ஊடாக மேற்கொள்ளப்படும் துன்புறுத்தல்களை தடுப்பதற்கும் பயன்படக்கூடியன.

போலி கணக்குகளை மிக வேகமாக கண்டறியவும் அக் கணக்குகளை தடை செய்யவும் முடியும்.

தவிர ஒருவரால் அனுப்பப்டும் குறுஞ்செய்தியை அவருக்கு தெரிவிக்காமலேயே படித்துவிடவும் முடியும்.

முன்னர் இவ்வாறான குறுஞ்செய்தியை படித்தவுடன் அனுப்பியவருக்கு தானாகவே தெரியப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்