இன்டர்நெட் இல்லாமல் செயல்படும் ஆப்ஸ் உருவாக்கம்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

அவசர நிலமைகளின் போது உதவியைப் பெற்றுத்தரும் ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான அப்பிளிக்கேஷன் ஒன்றின விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

உதாரணமாக நில நடுக்கம், வெள்ளம், காட்டுத் தீ போன்றவற்றில் சிக்கியிருக்கும் தருணங்களில் இதனைப் பயன்படுத்தி உதவியைப் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த அப்பிளிக்கேஷன் செயற்படுவதற்கு இணைய இணைப்பு அவசியம் இல்லை என்பது விசேட அம்சமாகும்.

இதனை ஸ்பெயினில் உள்ள Universidad de Alicante (UA) நிறுவத்தை சேர்ந்த விஞ்ஞானிகளே சாத்தியமாக்கியுள்ளனர்.

மேலும் உதவி தேவைப்படுபவர் தொடர்பான தகவல்களை சுமார் இரண்டு தொடக்கம் மூன்று கிலோ மீற்றர்கள் வரை அனுப்பி வைக்கக்கூடியதாக இருக்கின்றது.

அத்துடன் பாதிக்கப்பட்டவரின் நிலைமைக்கு ஏற்ப "I am injured," "I am disorientated," அல்லது "I need help," போன்ற குறுஞ்செய்திகளுடன் இருப்பிடத்தினையும் துல்லியமாகக் காட்டக்கூடியதாகவும் காணப்படுகின்றது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்