இன்றைய காலத்தில் பலருக்கும் பொழுது விடிவது ஸ்மார்ட்போனில் தான், அப்படிபட்ட ஸ்மார்ட்போனை காணவில்லை என்றால் என்ன ஆகும்?
இரவு பயன்படுத்தும்போது எங்கேயாவது வைத்து விட்டு காலையில் முதல் வேலையாக அதைத்தான் தேடி அங்குமிங்கும் அலைவார்கள்.
இவர்களுக்காகவே வந்துள்ளது Whistle To Find எனும் ஆப்ஸ்.
5.9MB அளவு கொண்ட இந்த ஆப்ஸின் மூலம் மொபைல் போனை கண்டுபிடிக்கலாம், இதற்கு மூன்று விதமான வழிமுறைகள் உள்ளனவாம்.
ஒலி, ஃபிளாஷ் மற்றும் வைப்ரேட் போன்றவைதாம், இவற்றில் ஒன்றை மட்டுமோ அல்லது மூன்றையும் சேர்த்தோ பயன்படுத்தலாம்.
ஒருவாரத்தில் எத்தனை நாள்கள் எவ்வளவு மணிநேரம் இந்த வசதி செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்பதையும் நாமே செட் செய்யலாம், ரிங்டோன்களை செட் செய்யும் வசதியும் உள்ளது.