மீண்டும் iBook அப்பிளிக்கேஷனை உருவாக்கும் முயற்சியில் ஆப்பிள்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
12Shares
12Shares
lankasrimarket.com

சம காலத்தில் அச்சுப்பதிக்கப்பட்ட புத்தகங்களிலும் பார்க்க இலத்திரனியல் புத்தகப் பாவனையே அதிகமாக காணப்படுகின்றது.

இதனைக் கருத்தில்கொண்டு ஆப்பிள் நிறுவனம் iBook அப்பிளிக்கேஷனை மீள உருவாக்கவுள்ளது.

இந்த அப்பிளிக்கேஷனின் ஊடாக ஐபோன்கள் மற்றும் ஐபேட்களில் விரும்பிய இலத்திரனியல் புத்தகங்களை படிக்க முடியும்.

இந்த அப்பிளிக்கேஷன் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் எளிமையான இடைமுகத்துடன் வடிவமைக்கவுள்ளது.

இம் மீள் வடிவமைப்பிற்காக அமேஷானின் உதவியையும் நாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்