வாட்ஸ் ஆப் செயலியின் மற்றுமொரு அபார வளர்ச்சி

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

மாதம் தோறும் சுமார் 1.3 பில்லியன் செயற்பாட்டு பயனர்களை கொண்ட செயலியாக வாட்ஸ் ஆப் விளங்கிவருகின்றது.

இச் செயலியானது தற்போது அன்ரோயிட் மற்றும் iOS இயங்குதளங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கார்களில் பயன்படுத்தப்படும் Apple CarPlay இல் வாட்ஸ் ஆப்பினை பயன்படுத்தக்கூடியதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதாவது Apple CarPlay இல் வாட்ஸ் ஆப் செயலியை நிறுவி காரை ஓட்டும் நேரத்திலேயே குறுஞ்செய்திகளை பரிமாறிக்கொள்ள முடியும்.

இதன்போது கார் ஓட்டுவதில் ஏற்படும் சிரமத்தினை தவிர்ப்பதற்கு ஓரிரு எழுத்துக்களை தட்டச்சு செய்ததும் சில சொற்களை காண்பிக்கும் Dictation முறையில் குறுஞ்செய்திகளை தட்டச்சு செய்ய முடியும்.

தவிர ஆப்பிளின் Siri வசதியின் ஊடாக பெறப்பட்ட குறுஞ்செய்திகளை ஒலி வடிவில் கேட்கவும் முடியும்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்