விரும்பிய நேரத்தில் போஸ்ட் போடலாம்: இன்ஸ்டாகிராமில் புதிய வசதி

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
20Shares
20Shares
lankasrimarket.com

புகைப்படங்களை பகிரும் வசதியை தரும் முன்னணி தளமாக இன்ஸ்டாகிராம் விளங்குகின்றது.

இதில் தற்போது மற்றுமொரு புதிய வசதி தரப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்கால நோக்கம் கருதி விரும்பிய நேரத்திற்கு (Scheduling) போஸ்ட் அப்டேட் ஆகும் வகையில் முன்கூட்டியே செட்டிங் செய்ய முடியும்.

இத் தளத்தில் வீடியோக்களையும் பதிவேற்றம் செய்ய முடியுமாயினும் இவ் வசதியை பயன்படுத்தி புகைப்படங்களை மாத்திரமே தற்போது பதிவு செய்ய முடியும்.

எனினும் இவ் வசதியினை வியாபார நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்ட கணக்குகளில் மாத்திரமே பயன்படுத்த முடியும்.

2019ம் ஆண்டில் இருந்து அனைத்து வகையான பயனர்களும் இதனைப் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்