கலையும்... கலைக்குரிசிலும்

Report Print Deepthi Deepthi in கட்டுரை
0Shares
0Shares
lankasrimarket.com

தமிழரின் பாரம்பரிய கலை வடிவமாகவும் அணிகலனாகவும் கூத்துக்கள் திகழ்கின்றன.

எமது தேசியச் சொத்தான கூத்திசைமிக்கதாக எழுதிப்பாடியும் ஆடியும் பயிற்றுவித்து வளர்த்த "கலைக்குரிசில் நீ வ அந்தோனி அண்ணாவியாரின் ஆரம்பகால வரலாற்றை நாடகமேடையில் நவரசங்களை சித்தரித்து கவியின் ஊடாக பாவங்களை வடித்துக் காட்டிய அந்த காவிய விற்பனர் கலை உலகில் கால்பதித்த 1928ம் ஆண்டிலான இற்றைக்கு 82 வருடங்களுக்கு முற்பட்ட காலப்பகுதியின் சில பக்கங்களை பின்னோக்கி புரட்டுவோம்.

யாழ் நகரின் நெய்தல் நிலப்பரப்பில் 1902ம் ஆண்டு பங்குனி திங்கள் 4ம் நாள் நீ வ அந்தோனி அண்ணாவியார் வயித்தியான்- மதலேனா தம்பதியருக்கு ஏகபோக வாரிசாக அவதரித்தார். Drama 1923ம் ஆண்டு கடல்-படுதிரவியத்தின் பால் ஈர்க்கப்பட்டு காவலூரின் தென்திசையில் மருதமும் நெய்தலும் சங்கமிக்கும் கரம்பொன் தெற்கு பகுதியில் தன்குடியிருப்பை அமைத்து தொழிலில் ஈடுபடலானார்.

இன்று இப்பகுதி மெலிஞ்சிமுனை என்னும் தனித்துவமிக்க கலைக்கிராமமாக கிறிஸ்து அரசர் ஆலயம் அமைத்து வளமுடன் திகழ்கின்றது.

மரபுவழி நாடக நடிகர்களுக்கு அவர்கள் அன்றாடம் மேற்க்கொள்ளும் தொழில்சார் பயிற்ச்சியே வளர்ச்சியான்கிறது.

கடற்தொழிலில் ஈடுபடுபவர்கள் ஆழக்கடலில் மூச்சடக்கி முத்து சங்கு கடல்த்தாவரம் எடுக்கும் போது தசைநார்களின் விரிநிலையால் ஏற்படும் குரல் தெளிவும் சாரீர பயிற்சிக்கு மூலகாரணியாகிறது.

இயல்பாகவே இந்நிலையில் ஒன்றித்து குரல்வளம் பெற்றிருந்த அந்தோனி அண்ணாவியாருக்கு பாரம்பரியக்கலையாம் கூத்தின் மீது ஆர்வம் ஏற்படவே 1928ம் வருடம் தனது 26வது வயதில் கரம்பொன் செபாஸ்தியர் கோவில்- மேடையேற்றப்பட்ட "மத்தேசு மகிறம்மா" என்னும் நாட்டுக்கூத்தில் மாமன்னனுக்குரிய வீறு நடையோடு

கணீரென்று ஒலிக்கும் குரல்வளத்துடன் ஒலிவாங்கி இல்லாமலே தூரத்தில் இருக்கும் பார்வையாளருக்கு கேட்கும்படியாக தனது அறிமுக வரவுக் காட்சியிலேயே தன் தனித்துவமான ஆற்றலை வெளிப்படுத்தி பலதரப்பு நாடக ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுதலை தன்வசப்படுத்திக் கொண்டார்.

அண்ணாவியாராகும் திருப்பம் இரண்டாவது கூத்தான ஊசோன்பாலந்தை மூலம் ஏற்படுகிறது. ஊசோன் பாலந்தையை காட்சியமைப்புக்கு ஏற்றவாறு பல பாடல்களை புதிதாக எழுதி மீள் வடிவமிட்டு 1931ம் ஆண்டு கரம்பனில் மேடையேற்றியதுடன் அக்கூத்தின் பிரதான பாத்திரமாகிய- பெப்பேனிய அரசராக வீரமிகு வேங்கையாக இரண்டு இரவுகள் தொடராக பாடல் நடிப்பு நெறியாள்கை என பன்முகத் தன்மையை ஒருமுகப்படுத்தி யாவரும் வியப்புறும் வண்ணம் போற்றிப் புகழப்பட்டார்.

ஊசோன்பாலந்தை நாடக வரலாற்றில் பெரிய மாறுதலை ஏற்ப்படுத்தவே- காலத்தின் அவசியம் கருதி ஓர் இரவுக்குரிய கூத்தாக சுருக்கி மாதகல் முல்லைத்தீவு பருத்தித்துறை மண்டைதீவு என பல்வேறு பிரதேச மக்களின் அழைப்பை ஏற்று அங்கு சென்று மேடையேற்றி மிகவும் பிரபலமானார்.

யாழ்நகரின் பட்டினத்தில் பல அண்ணாவிமார்கள் இருந்த போதும்- அன்றைய காலத்தில் தீவுப்பகுதிக்கு செல்ல பண்ணைப்பாலம் வரையுமே பிரையாண வசதி மட்டுப்படுத்தப்பட்ட சூழலிலும் அந்தோனி அண்ணாவியார் மீது கொண்ட அதீத பிடிப்பு நம்பிக்கை காரணமாக பல இடத்து நாடக ஆர்வலர்கள் படகு மூலமாகவும் துவிச்சக்கர வண்டி மூலமும் பல மைல்கள் கால் நடையாகவும் சென்று தங்கள் இடத்துக்கு அழைத்துச் சென்று பல கூத்துக்களை பழக்கி மேடையேற்றியுள்ளனர்.

இதனை நோக்குகையில் நாடகவியல் தலைமக்கள் குறிப்புரையின்-

"பாத்திரங்கட்கெல்லாம் பகர் முகம் செய்து
வலம்புரி சூழ்ந்த சலஞ்சலமென்னக
காணப்படுபவர் தலை மக்களென்ப"

நாடக பாத்திரங்களுக்கெல்லாம் சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற தலைமக்களாக பகர்மிகு வலம்புரிச்சங்கை ஆயிரம் இடம்புரிச்சங்கு சூழ்ந்தவாறாய்- உவமேய குறிப்பாய் அக்காலத்தில் நாடக அண்ணாவிமார்களான திரு.பொன்னுத்துரை திரு.பூந்தான்யோசேப்பு சில்லாலை-திரு.லூயிஸ்இ நாரந்தனை-திரு.சவிரிமுத்து போன்றோர் கலைக்குரிசிலை சூழ்ந்திருந்ததாக முன்னார் விதானையாரும் கரம்பனூர் பண்டிதருமாகிய சோ.தியாகராசபிள்ளை கட்டுரையில் குறிப்பிடுகிற்றார்.

தன் கற்பனை வளத்தால் செவிப்புலனிற்க்கும் மனதிற்க்கும் இன்பமும் அறிவும் ஊட்டும் வண்ணம்- அலசு நாடகத்தை தென்மோடிக்கூத்தாகஇ ஓர் செதுக்கிய ஓவியமாக வடித்து 1956ம் ஆண்டு கரம்பனில் அரங்கேற்றி மிகுந்த பாராட்டைப் பெற்றார்.

1960ம் ஆண்டு வடமாகாண கலைகலாச்சாரப் பிரிவால் நடாத்தப்பட்ட கலை கைப்பணி விழாவில் தீவுப்பகுதி உதவி அரசாங்க அதிபர் பிரிவில் கரம்பன் விதானையார்- பண்டிதர் சோ.தியாகராசபிள்ளை தலைமையில் திரு.லுக்கேஸ்இ திரு.வைத்தியார் அடங்கிய கலைக்குழு அமைக்கப்பட்டு கலைக்குரிசில் அவர்களிடம் கலை நிகழ்வை கூத்துப்பாடல் மூலம் ஒப்படைத்தனர். கலைக்குரிசில் அவர்கள் சங்ககாலத்தில் தமிழன் கப்பல் மூலம் வணிகம் செய்த வரலாற்றை கப்பல் பாலாக கூத்துமெட்டில் எழுதிக்கொடுத்தார்.

உழவுயந்திரத்தில் பாரிய கப்பலை வடிவமைத்து நடிகர்கள் அதில் மாலுமிகளாக பாடி ஆடி நடித்தனர். அந்நிகழ்வு அரசின் மிகுந்த பாராட்டை பெற்றது.

கிடைத்த தரவுகளின்படி 1931ம் ஆண்டு முதல்இ 1971ம்ஆண்டு வரை தான் எழுதிய கூத்துக்களையும் பல புலவர்கள் எழுதிய கூத்துக்களாகவும் 50க்கு மேற்பட்ட நாட்டுக்கூத்துக்களை பல தரப்பு மக்களை நாடிச்சென்றுஇ பின்வரும் பிரசேசங்களில் கரம்பன்இ மானிப்பாய்இ ஊர்காவற்றுறைஇ நாரந்தனைஇ மண்டைதீவுஇ மாதகல்இ மன்னார் பருத்தித்தீவுஇ எழுவைதீவுஇ முல்லைத்தீவு ஆகிய இடங்களில் மேடையேற்றியதுடன் களப்பயிற்ச்சின்

ஊடாக பல சிறந்த நடிகள்களை உருவாக்கியுள்ளார்.

1965ம் வருடம் கரம்பொன் சிறிய புஸ்பமகளீர் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற நாடகப் போட்டியில் கலைக்குரிசில் அவர்கள் தான் எழுதிய தாவீது கொலியாத்தெனும் நாட்டுக்கூத்தைஇ இளம் தலைமுறை மாணவர்களை வைத்து நெறிப்படுத்தி முதன்மை விருது பெற்று கௌரவிக்கப்பட்டார்.

கலைக்குரிசில் அவர்களால் எழுதப்பட்டு மேடையேற்றப்பட்ட கூத்துக்கள்
 1. ஞானானந்தன்
 2. அலசு
 3. சகோதரவிரோதி
 4. புனித செபஸ்தியார்
 5. மதிவீரன்
 6. பிரதாபன்
 7. மந்திரிகுமாரன்
 8. இராஜ குமாரி
 9. தர்மசீலன்
 10. திரு ஞானதீபன்
 11. பிரளயத்தில் கண்ட பாலன்
 12. தொம்மையப்பர்
 13. பிரபாகரன்
 14. தாவீதுஇ கொலியாத்து
 15. ஆனந்தசீலன்
 16. புனித கிறிஸ்தோப்பர்

கூத்துக்கலையின் உயிரோட்டத்தை பல நிலைகளில் வெளிக்கொணர்ந்து ஆளூமைப்படுத்திய அண்ணாவியாரின் கலைப்பணியை இனங்கண்டு 1969ம் வருடம் மாசிமாதம் 3ம் நாள் நாடகத்தந்தை கலையரசு கே.சொர்ணலிங்கம் அவர்கள் புனித கிறிஸ்தோப்பர் நாடகவிழாவில் பண்டிதர் சோ.தியாகராசா கலைக்கவி நீ.எஸ்தாக்கி கவிஞர் இநாகராஜன்அறிஞர்கள்இ பெருமக்கள் முன்னிலையில் "கலைக்குரிசில்" என்னும் பட்டமளித்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

மேலும் கட்டுரை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments