உடலுறவுக்கு இடம் எதற்கு? சர்ச்சையை கிளப்பிய பெண் அமைச்சர்

Report Print Arbin Arbin in ஆசியா
0Shares
0Shares
lankasrimarket.com

உடலுறவு கொள்வது சிறிய இடம் போதுமானது என சிங்கப்பூர் அமைச்சர் ஜோசபின் தியோ கூறியுள்ள கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் வளர்ந்த நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரில் குழந்தைகள் பிறப்பு விகிதம் என்பது குறைவாக உள்ளது. இதனால் அந்த நாட்டின் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வருகிறது. எனவே அந்நாட்டின் மக்கள் தொகையை அதிகரிக்க, குழந்தைகள் பெற்றுக் கொள்வது ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த திட்டம் தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிங்கப்பூர் அரசின் மக்கள் தொகை மற்றும் திறன் வளர்ச்சித் துறை அமைச்சர் ஜோசபின் தியோ, பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது அவரிடம், புதிதாக திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு அரசுக் குடியிருப்புகள் ஒதுக்கப்பட காலதாமதமாவதால்தான் அவர்கள் தங்கள் குழந்தை பேற்றை தள்ளிப்போடுவதாக கூறப்படுகிறது. அது குறித்து உங்கள் கருத்து என்ன? என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த ஜோசபின், இளம் தம்பதிகள் பெற்றோர்களாக மாறுவதற்கு சிறிய இடம் பொதுமானது என பதிலளித்தார்.

அதாவது ஆண், பெண் உடலுறவு கொள்வதற்கு இடம், சூழல் ஆகியவை தேவையில்லை என்பதை அவர் சூசகமாக தெரிவித்திருந்தார்.

அமைச்சர் ஜோசபின் தெரிவித்த இந்த கருத்துக்கு, அந்நாட்டின் சமூகவளைதள பயன்பாட்டாளர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு மரியாதையான பதவியில் இருப்பவர், இப்படி பேசலாமா என அவருக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments