விமானம் வெடித்து சிதறும்: பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிக்கு கடவுள் விடுத்த எச்சரிக்கை

Report Print Peterson Peterson in ஆசியா
0Shares
0Shares
lankasrimarket.com

பிலிப்பைன்ஸ் நாட்டு ஜனாதிபதி பயணம் செய்த விமானத்தை வெடிக்க வைத்துவிடுவேன் என கடவுள் அவரிடம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியான Rodrigo Duterte ஜப்பான் நாட்டில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு தாய்நாட்டிற்கு விமானத்தில் புறப்பட்டுள்ளார்.

தாய்நாட்டிற்கு திரும்பிய பிறகு Davao என்ற நகரில் ஜனாதிபதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

அப்போது, ‘விமானத்தில் அமர்ந்திருந்தபோது கடவுள் என்னிடம் பேசினார்.

இனிவரும் காலங்களில் யாரையும் தீய வார்த்தைகளில் திட்டக்கூடாது என சத்தியம் செய்ய வேண்டும்.

இல்லையெனில், விமானத்தை உடனடியாக வெடிக்க வைத்து விடுவேன் என கடவுள் என்னை எச்சரித்தார்.

இதனால், இனிவரும் காலங்களில் யாரையும் திட்ட மாட்டேன் என கடவுளிடம் சத்தியம் செய்துவிட்டேன்.

கடவுள் மீது நான் செய்துள்ள இந்த சத்தியம் குடிமக்கள் மீது செய்த சத்தியத்திற்கு சமமாகும்’ என பேட்டியளித்துள்ளார்.

அதே சமயம், கடவுள் மீது செய்த இந்த சத்தியமானது ஒரு எல்லைக்குட்பட்டது மட்டும் தான் எனவும் ஜனாதிபதி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதியான ஒபாமாவை ‘விலைமாதுவின் மகன்’ என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி கடுமையாக விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments