குழந்தையை கொடூரமாக எட்டி உதைத்த இளம்பெண்! எதற்காக? அதிர்ச்சி வீடியோ

Report Print Jubilee Jubilee in ஆசியா
0Shares
0Shares
lankasrimarket.com

மலேசியாவில் தனது குழந்தையை காப்பாற்ற இளம்பெண் ஒருவர் செய்த செயல் வீடியோவாக வெளியாகி உள்ளது.

குறித்த வீடியோவில், இளம்பெண் ஒருவர் தனது 3 வயது பெண் குழந்தையுடன் லிஃப்டில் ஏறச் செல்கிறார், அப்போது அவருக்கு முன்னதாக குழந்தை லிஃப்ட் கதவு அருகே செல்கிறது.

அந்த லிஃப்டில் கதவுகளில் சென்சார் இல்லாததை உணர்ந்த இளம்பெண் தனது குழந்தையை காப்பாற்ற வேகமாக ஓடி வந்து எட்டி உதைக்கிறார்.

இந்த அதிர்ச்சி சம்பவம் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகி உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக அங்கிருந்த பாதுகாவலர் ஒருவர் கூறுகையில், நல்லவேளையாக குழந்தை லிஃப்ட் கதவுகளில் சிக்கவில்லை. அது மிகவும் அதிர்ஷ்டம் செய்துள்ளது.

அந்த கதவுகளில் சென்சார் இல்லை என்பதை தெரிந்து அந்த இளம்பெண் துடிப்பாக செயல்பட்டுள்ளார். லிஃப்ட் அருகே செல்லும் போது குழந்தைகளை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments