ரோலர் கோஸ்டரில் மோதி பலியான சிறுமி: ரூ.2 கோடி இழப்பீடு வழங்க முடிவு

Report Print Peterson Peterson in ஆசியா
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

சீனா நாட்டில் ரோலர் கோஸ்டரில் பயணம் செய்தபோது தவறி விழுந்து உயிரிழந்த சிறுமிக்கு விளையாட்டு பூங்கா உரிமையாளர் ரூ.2 கோடி இழப்பீடு வழங்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

மத்திய சீனாவில் உள்ள Chongqing நகரில் Chaohua Park என்ற விளையாட்டு பூங்கா ஒன்று இயங்கி வருகிறது.

advertisement

இந்நிலையில், இந்த பூங்காவிற்கு தன்னுடைய 8 வயதான ஒரே மகளை அழைத்துக்கொண்டு பெற்றோர் சென்றுள்ளனர்.

ரோலர் கோஸ்டரில் சிறுமி விளையாட விருப்பம் தெரிவித்தபோது பெற்றோர் அதற்கு சம்மதம் தெரிவித்தனர்.

பின்னர், சிறுமி அதில் அமர்ந்ததும் ரோலர் கோஸ்டர் உயரத்திற்கு சென்று சுற்ற தொடங்கியுள்ளது.

அப்போது, திடீரென சிறுமியின் ‘சீட் பெல்ட்’ அறுந்துள்ளது. ரோலர் கோஸ்டர் அதிவேகத்தில் சுழன்றுக்கொண்டு இருந்ததால் சிறுமி இருக்கையில் இருந்து தூக்கி வீசப்பட்டுள்ளார்.

எதிரே இருந்த இரும்பு கம்பி மீது பலமாக மோதி சிறுமி கீழே விழுந்துள்ளார்.

இக்காட்சியைக் கண்டு துடிதுடித்து போன பெற்றோர் தங்களது மகளை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனளிக்காத காரணத்தினால் சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பத்தை தொடர்ந்து விளையாட்டு பூங்காவில் உள்ள அனைத்து விளையாட்டுகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு அனைத்து சாதனங்களும் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், சீட் பெல்ட் தரமானதாக இல்லாததால் தான் விபத்து நேர்ந்ததாக விளையாட்டு பூங்கா உரிமையாளர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதனை தொடர்ந்து, மகளை இழந்த பெற்றோருக்கு 1,27,000 டொலர்(1,91,32,550 இலங்கை ரூபாய்) இழப்பீடு மற்றும் மருத்துவத்திற்கு ஆன செலவுகளையும் வழங்க உரிமையாளர் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments