ஆவேசத்துடன் சீறிக்கொண்டு வீட்டிற்குள் நுழைய முயற்சித்த நாகப்பாம்பு: பதறவைக்கும் வீடியோ

Report Print Deepthi Deepthi in ஆசியா
0Shares
0Shares
lankasrimarket.com

புருனேவில் கருப்பு நிற நாகப்பாம்பு ஒன்று ஆவேசத்துடன் படமெடுத்து நின்றதோடு மட்டுமல்லாமல் வீட்டின் ஜன்னல் வழியாக நுழைவதற்கான முயற்சியில் ஈடுபட்ட காட்சி பார்ப்பவர்களை பதறவைக்கிறது.

வீடியோவில் பதிவான காட்சியில், வீட்டிற்கு அருகாமையில் வளர்க்கப்பட்டுள்ள செடி கொடிகளுக்கு மத்தியில் மறைந்திருந்த நாகப்பாம்பு, தனது தலையினை தூக்கி ஆவேசத்துடன் சீறி வருகிறது.

ஆனால், வீட்டின் ஜன்னல் மூடப்பட்டுள்ளதால் வீட்டுக்குள் வரமுடியாமல் சீருகிறது. இந்த காட்சியை அந்த வீட்டில் வசித்து வந்த சிறுமி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.

இந்நிலையில், அந்த நேரம் பார்த்து வீட்டிற்கு அருகாமையில் நடந்துசென்ற நபர், பெரிய பிரம்பினை எடுத்து நாகப்பாம்பினை அடித்துக்கொன்றுள்ளார்.

இந்த வீடானது அரசாங்கத்தால் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடு என்பதால், இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை அந்த வீட்டில் வசித்து வந்த நபர் அரசாங்கத்திடம் கொடுத்துள்ளார்.

இந்த வீடியோ குறித்து சுற்றுசூழல் முறை கூறியதாவது, வீட்டிற்கு அருகாமையில் செடிகள் மற்றும் மரங்கள் வளர்ப்பவர்கள் மிகவும் கவனமாக வளர்க்க வேண்டும்.

குறிப்பாக ஜன்னலுக்கு அருகில் செடிகொடிகளை வளர்ப்பதை தவிர்க்க வேண்டும். அப்படி வளர்த்தாலும் வெளியில் செல்லும்போது ஜன்னல்களை அடைத்து விட்டு செல்லவேண்டும்.

தற்போது, இந்த வீட்டில் ஜன்னல் அடைத்து வைக்கப்பட்டுள்ளதால் பெரிய ஆபத்தில் இருந்து தப்பித்துள்ளார்கள். இல்லாவிட்டால் அந்த நாகப்பாம்பானது நிச்சயம் வீட்டிற்குள் நுழைந்திருக்கும்.

முடிந்தவரை ஜன்னலுக்கு அருகில் செடிகள் மற்றும் மரங்களை வளர்ப்பதை தவிருங்கள் என அறிவுரை வழங்கியுள்ளது.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments