ஆசிட் வீச்சால் கருகிய முகம்: இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

Report Print Raju Raju in ஆசியா
0Shares
0Shares
lankasrimarket.com

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட இளம் பெண் அறுவை சிகிச்சைக்கு பின்னரான தனது முகத்தை தைரியமாக வெளியுலகிற்கு காட்டியுள்ளார்.

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் Kanwal Qayyum (26), இவருக்கு பள்ளி பருவத்திலிருந்தே விமான பணிப்பெண் ஆவதே விருப்பமாக இருந்தது.

அழகு தேவதையாக வலம் வந்து கொண்டிருந்த Kanwal தனது 19 வயதில் வீட்டில் தூங்கி கொண்டிருக்கும் போது மர்ம நபர் ஒருவர் அவர் முகத்தில் ஆசிட்டை வீசியுள்ளார்.

முகம் முழுவதும் கருகி போன நிலையில் கடந்த 10 வருடங்களாக அவர் பல விதமான சிகிச்சையை மேற்கொண்டுள்ளார்.

பிரித்தானியா நாட்டை சேர்ந்த Asim Shahmalak என்னும் மருத்துவர் அவருக்கு தொடர் சிகிச்சைகள் அளித்தார்.

Asimவின் மூக்கு முழுவதும் வெந்து போனதால், அவர் தொடை பகுதியில் தோலை வைத்து மூக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது.

முழு சிகிச்சைக்கு பின்னர் அவருக்கு முகம் கிடைத்துள்ளது. என்ன தான் கோரமான முகமாக இருந்தாலும் அதை தைரியமாகவும், பெருமையாகவும் உலகிற்கு காட்டியுள்ளார் ஒரு குழந்தைக்கு தாயான Kanwal.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments