விமானத்தில் இடமில்லை! நின்று கொண்டே பயணிகள் பயணம் செய்ததால் சர்ச்சை

Report Print Raju Raju in ஆசியா
0Shares
0Shares
lankasrimarket.com

பாகிஸ்தான் அரசு விமானத்தில் உட்கார இடம் இல்லாததால் பலர் நின்று கொண்டு பயணம் செய்துள்ளது சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் கராச்சியிலிருந்து கடந்த மாதம் 20ஆம் திகதி PK-743 என்னும் அரசு விமானம் சவுதி அரேபியாவுக்கு கிளம்ப தயாராக இருந்தது.

409 பேர் மட்டுமே அமரக்கூடிய அந்த விமானத்தில் பயணம் செய்ய 416 பேர் ஏறியுள்ளனர்.

மொத்த இருக்கை எண்ணிக்கையை விட ஏழு பயணிகள் கூடுதலாக அனுமதிக்கப்பட்டதால் அவர்கள் விமானத்தின் நடைபாதையில் நின்று கொண்டே சவுதி அரேபியாவின் மதீனா நகர் வரை பயணம் செய்து வந்தனர்.

மேலும், அவர்களுக்கு கணினி பயணச்சீட்டுக்கு பதில் கையால் எழுதப்பட்ட பயணச் சீட்டை விமான பணியாளர்கள் அளித்துள்ளனர்.

கடந்த மாதம் நடைபெற்ற இந்த சம்பவத்தை, தற்போது பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிக்கை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments