சீன மக்களின் மனதை கவர்ந்த 5 வயது சிறுமி

Report Print Raju Raju in ஆசியா
0Shares
0Shares
Cineulagam.com

சீனாவில் பெற்றோரால் கைவிடப்பட்ட 5 வயது சிறுமி தன் பாட்டியையும், கொள்ளு பாட்டியையும் பராமரித்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவை சேர்ந்தவர் Wang Anna (5) இவரின் தந்தை இவர் கை குழந்தையாக இருக்கும் போதே சிறைக்கு சென்று விட்டார்.

Wangன் தாய் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு தன் மகளை கைவிட்டு சென்று விட்டார்.

Wang தனது பாட்டி மற்றும் கொள்ளு பாட்டி ஆகியோருடன் வசித்து வருகிறார்.

பாட்டிக்கு கீழ்வாத நோய் உள்ளதால் எழுந்து நடமாட முடியாது. அதே போல கொள்ளு பாட்டிக்கு 92 வயதாவதால் நடமாட முடியாது.

இருவரையும் Wang Anna தான் பராமரித்து வருகிறார்.

காய்கறிகளை தோட்டத்திலிருந்து பறித்து வந்து சமைப்பது, வீட்டை சுத்தம் செய்வது, இரண்டு பாட்டிகளுக்கு சாப்பாடு ஊட்டிவிடுவது, குளிப்பாட்டி விடுவது என இவர் செய்யும் செயல்கள் ஆச்சரியப்படுத்துகின்றன.

அருவருப்பில்லாமல் அவர்களுக்கு Wang பணிவிடை செய்கிறார்.

சிறுமிக்கு வேறு யாராவது எந்த விதத்திலாவது உதவுகிறார்களா என்ற விவரம் தெரியவில்லை. தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து, இச்சிறுமி சீன மக்களின் மனதை மட்டுமல்லாது உலக மக்களின் மனதையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

பெற்றோரை கண்டுகொள்ளாமல் இருக்கும் பிள்ளைகளுக்கு இந்த சிறுமி ஒரு எடுத்துக்காட்டு என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments