தங்கள் சவப்பெட்டியை தாங்களே தேர்ந்தெடுக்கும் ஜப்பானியர்கள்

Report Print Kabilan in ஆசியா
0Shares
0Shares
lankasrimarket.com

ஜப்பானில் தங்கள் சவப்பெட்டியை தாங்களே தேர்வு செய்யும், ’Shukatsu festival' எனும் விசித்திரமான திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இறுது வாழ்க்கை கருத்தரங்குகள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16ஆம் திகதி நடைபெற்று வருகிறது. ஒரு திருவிழா போல நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில், ஜப்பானியர்கள் தங்களின் இறுதிச் சடங்கு எந்த விதத்தில் நடைபெற வேண்டும்,

எந்த மாதிரியான உடைகள், சவப்பெட்டிகள் அப்போது பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை தேர்வு செய்கின்றனர்.

இந்த விழா ‘Shukatsu festival' என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவில் பங்கு பெற்ற மக்கள், தங்களுக்கு பொருத்தமான சவப்பெட்டியை தேர்ந்தெடுத்தனர்.

மேலும், அந்த சவப்பெட்டியில் படுத்து புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். அடுத்த 50 ஆண்டுகளில், ஜப்பானில் மக்கள் தொகை 30 மில்லியன் என்ற அளவில் குறையக்கூடும்.

எனவே, இறப்பு சம்மந்தமான ஏதாவது ஒரு நிகழ்ச்சியை கொண்டாடுவதில் தவறில்லை என ஜப்பானிய வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்