ஐந்து மாத கர்ப்பமான 11 வயது சிறுமி

Report Print Kabilan in ஆசியா
769Shares
769Shares
lankasrimarket.com

சீனாவில் 11 வயது பள்ளிச் சிறுமி ஐந்து மாத கர்ப்பமான விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் Magutian நகரில் உள்ள பள்ளியில் படித்து வரும் சிறுமி Lele, இச்சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், சிறுமியின் தாயார் மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார்.

Lele-ஐ பரிசோதித்த மருத்துவர், அவள் ஐந்து மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர், இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கருவை கலைக்க முயன்றுள்ளனர்.

ஆனால், அந்த மருத்துவர் உடனடியாக பொலிஸுக்கும் தகவல் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து பொலிசார் நடத்திய விசாரணையில், அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்தன. சிறுமி படித்து வரும் பள்ளியின் காவலாளியாக பணிபுரியும் Liu எனும் நபரே, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

50 வயதான அந்நபர் ஏற்கனவே திருமணமானவர் ஆவார். அவர், சிறுமியை கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார், படிப்பில் முதல் மாணவியாக இருந்த Lele, காவலாளியின் துன்புறுத்தலினால் பாதிக்கப்பட்டார்.

இந்நிலையில், தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட Liu-வை பொலிசார் கைது செய்தனர். முன்னதாக, பொலிசார் விசாரணை நடத்திய போது சிறுமியின் குடும்பத்தினர், பலமுறை அறிக்கைகளை மாற்றி அளித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்