அரசு மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: உயிர் தப்பிய தலைவர்

Report Print Kabilan in ஆசியா
20Shares
20Shares
lankasrimarket.com

மியான்மர் நாட்டில் அரசுத் தலைவர் ஆங் சான் சூச்சி மாளிகையின் மீது, பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான வன்முறை சம்பவங்களுக்கு, அரசுத் தலைவர் ஆங் சான் சூச்சி ஆரம்பத்தில் மௌனம் சாதித்து வந்ததால், ஐ.நா. சபை, சர்வதேச சமூகங்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில், சூச்சியின் அரசுத் தலைவர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மியான்மர் அரசு செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘யான்குன் நகரில் அமைந்துள்ள மியான்மர் அரசுத் தலைவர் ஆங் சான் சூச்சியின் மாளிகை மதில் சுவரின் மீது, இன்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

இச்சம்பவம் நடைபெற்றபோது சூச்சி அவரது இல்லத்தில் இல்லை’ என தெரிவித்துள்ளார். இந்த பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், முஸ்லீம்களுக்கு ஆதரவாக சூச்சி குரல் கொடுக்காததே, இந்த குண்டு வீச்சுக்கு காரணம் என கூறப்படுகிறது. மேலும், அந்த மாளிகையில் தான் சூச்சி, 15 ஆண்டுகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்