200 கிலோ முதலையை வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கும் நபர்

Report Print Kabilan in ஆசியா
199Shares
199Shares
lankasrimarket.com

தாய்லாந்தில் நபர் ஒருவர், 200 கிலோ எடை கொண்ட முதலையை செல்லப்பிராணியாக தனது வீட்டில் வளர்த்து வருகிறார்.

தாய்லாந்தைச் சேர்ந்தவர் முகமது இவான். இவர் 21 வயதான, 200 கிலோ எடை கொண்ட முதலை ஒன்றை தனது வீட்டில் செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘கடந்த 1997ஆம் ஆண்டு, மீனவர் ஒருவரின் வலையில் மாட்டிய சின்னஞ்சிறிய முதலையைக் கண்டேன். அதனைப் பார்த்ததும் எனக்கு பிடித்துவிட்டது.

அதன் பின்னர், அந்த முதலையை பணம் கொடுத்து வாங்கி, வீட்டிற்கு கொண்டு வந்தேன். ஆனால், என் வீட்டில் உள்ளவர்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

எனினும், முதலையை எனக்கு பிடித்திருந்ததால் அதற்கு ’கோஜெக்’ என்று பெயரிட்டு வளர்க்க ஆரம்பித்தேன். வராண்டாவில் ஒரு பெரிய நீர்த் தொட்டியை, முதலைக்காக கட்டினேன். எனக்கு முதலைகளைப் பற்றி அவ்வளவாக தெரியாது.

எனினும், நாளடைவில் முதலையின் இயல்பை நேரடியாகவே பார்த்து தெரிந்து கொண்டேன். பின்னர், எனது வீட்டாருக்கும் முதலையை பிடித்து விட்டது. தற்போது, 8 அடி நீளத்தில் வளர்ந்து பெரிய முதலையாக கோஜெக் மாறியுள்ளது.

என் குழந்தைகள் முதலையில் அருகிலேயே விளையாடினாலும், முதலையால் எந்த தீங்கும் ஏற்பட்டதில்லை. இதற்கு தினமும் 1.5 கிலோ முதல் 5 கிலோ வரை மீன்களை உணவாக அளிக்கிறேன்.

வாரம் ஒருமுறை முதலையை குளிக்க வைப்பதோடு, பல் துலக்கி விடுவேன். இந்த முதலையை உள்ளூர், வெளிநாட்டினர் கூட பார்க்க வருகின்றார்கள். வெளிநாட்டுக்காரர் ஒருவர், 47 லட்சத்திற்கு முதலையை வாங்கிக் கொள்வதாக கேட்டார். ஆனால், இது எனது பிள்ளை என்று கூறி மறுத்துவிட்டேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்