சவுதி அரேபியாவில் 12 மில்லியன் வெளிநாட்டவர்கள் வேலையிழக்கும் அபாயம்

Report Print Kabilan in ஆசியா
0Shares
0Shares
lankasrimarket.com

சவுதி அரேபியாவில் விதிக்கப்பட்டுள்ள புதிய சட்டத்தால் சுமார் 12 மில்லியன் வெளிநாட்டவர்கள் வேலையிழக்கும் அபாயம் உருவாகியுள்ளது.

உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் விற்பனை சார்ந்த 12 துறைகளில் வெளிநாட்டினர் பணிபுரிய சவுதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது. இதற்கு தொழில்துறை அமைச்சர் அலி பின் நாசர் அல் ஃகாபிஸ் ஒப்புதல் அளித்துள்ளார்.

சவுதியில் 12 மில்லியன் வெளிநாட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர், இந்நிலையில், சவுதி அரசின் இந்த சட்டத்தினால், 12 துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் உள்நாட்டினரை மட்டுமே, அதிகளவில் பணியில் அமர்த்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, ஆயத்த ஆடை விற்பனையகங்கள், வீடு மற்றும் அலுவலக மரச்சாமான்கள் விற்பனையகங்கள், வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்றில் வரும் செப்டம்பர் 11ஆம் திகதி முதல், வெளிநாட்டினரை பணியில் அமர்த்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே போல வரும் நவம்பர் 9ஆம் திகதி முதல் மின்னணு சாதன கடைகள், கடிகார விற்பனையகங்கள் கண்ணாடி விற்பனையகங்கள் ஆகியவற்றிலும் வெளிநாட்டினர் பணியில் அமர்த்தப்படுவது நிறுத்தப்படும்.

மேலும், ஜனவரி 7ஆம் திகதி முதல் மருத்துவ உபகரணங்கள் மற்றும் விநியோக விற்பனைக் கூடங்கள், கட்டுமான பொருட்கள் விற்பனையகங்கள், வாகன உதிரிபாக கடைகள், தரைவிரிப்பு கடைகள், இனிப்புக் கடைகளில் வெளிநாட்டினர் பணியில் புதிதாக சேரவோ அல்லது ஏற்கனவே பணியில் இருந்தால் அவர்கள் நீடிக்கவோ முடியாது.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்