பாரிய அழிவை சந்திக்குமா உலகம்? புவியியலாளர்கள் சொல்வது என்ன

Report Print Balamanuvelan in ஆசியா
0Shares
0Shares
lankasrimarket.com

சென்ற மாதத்தில் மட்டும் ஏற்பட்ட நான்கு பேரழிவுகள் இனி வரப்போகும் மாபெரும் பூகம்பத்திற்கு முன்னோடி என்று சிலர் கருதுகின்றனர்.

பிப்ரவரி 6ஆம் திகதி தைவானில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவுள்ள பூகம்பத்தால் 17 பேர் கொல்லப்பட்டனர், 180 பேர் காயமடைந்தனர்.

5.7 முதல் 4.9 ரிக்டர் அளவுள்ள 4 நில அதிர்வுகள் நேற்று அமெரிக்க தீவுப்பகுதி மாகாணமான Guamஐ குலுங்கச் செய்தன.

பிப்ரவரி 11 முதல் மூன்று நில நடுக்கங்கள் ஜப்பானைத் தாக்கி உள்ளன.

இவற்றிற்கெல்லாம் என்ன காரணம்?

புவியியலாளர்கள் அளிக்கும் விளக்கம் பயத்தை சற்று தணிக்கிறது.

பசிபிக் பகுதியில் ”நெருப்பு வளையம்” என்று அழைக்கப்படும் குதிரை லாட வடிவ நிலவியல் பேரழிவு மண்டலம் ஒன்று காணப்படுகிறது.

இது நியூஸிலாந்து தொடங்கி ஆசிய மற்றும் அமெரிக்க கடற்கரையோரமாக சிலியில் சென்று முடிகிறது.

இந்தப்பகுதியில் பல நிலத்தட்டுகள் அமைந்துள்ளன. இந்தத் தட்டுகள் நகர்வதால் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

இதே நிகழ்வு கடலுக்கு அடியில் ஏற்பட்டால் அதன் விளைவாக சுனாமி ஏற்படுகிறது. சில நேரங்களில் பாதிப்பை ஏற்படுத்தினாலும் இது ஒரு இயற்கை நிலவியல் நிகழ்வு.

உலகின் 90% நில நடுக்கங்களும் இந்தப்பகுதியில்தான் தோன்றுகின்றன, இந்தப் பகுதியில்தான் 450க்கும் மேற்பட்ட எரிமலைகளும் அமைந்துள்ளன.

ஆனால் சமீபத்தில் நிகழ்ந்த நிலநடுக்கங்களுக்கும் இந்த நெருப்பு வளையத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று நிலவியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

அவை அனைத்தும் இந்த நெருப்பு வளைய பகுதியில் ஏற்பட்டிருந்தாலும் கூட அவை தற்செயலாக நிகழ்ந்தவையே என விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்