லொறி ஓட்டி பாலத்தை திறந்த ரஷ்ய ஜனாதிபதி புடின்

Report Print Kabilan in ஆசியா
78Shares
78Shares
lankasrimarket.com

ரஷ்யா மற்றும் கிரிமியாவை இணைக்கும் பாலத்தை ரஷ்ய ஜனாதிபதி புடின் திறந்து வைத்தார்.

ரஷ்யாவை கிரிமியாவுடன் இணைக்கும் பாலம், சுமார் 3.60 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தினை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமின் புதின் திறந்து வைத்தார்.

இந்த பாலத்தை வடிவமைத்த பொறியாளர்களுடன் கைகுலுக்கி பாராட்டிய புதின், ’இறுதியாக இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. உங்கள் திறமைக்கு நன்றி’ என தெரிவித்தார்.

அதன் பின்னர், சரக்கு வாகனம் ஒன்றை பாலத்தின் மீது ஓட்டி அவர் சோதனை நடத்தினார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,

‘கிரிமியாவை, ரஷ்யாவுடன் இணைக்கும் பாலம் நூற்றாண்டு கால கனவு. கிரிமியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த பாலம் உதவும்’ என தெரிவித்துள்ளார்.

ALEXEI DRUZHININ/SPUTNIK/KREMLIN/EPA-EFE
ALEXANDER NEMENOV/POOL,EPA-EFE
AFP/Alexander
Alexander Nemenov/AP

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்