மாசி மாதம்.. பிறந்தவர்களின் அதிர்ஷ்ட குணங்கள் தெரியுமா?

Report Print Printha in ஜோதிடம்
0Shares
0Shares
lankasri.com

ஜோதிட சாஸ்திரத்தில் ராசி, நட்சத்திரம், கிழமை, தேதி, மகா தசைகள் என்று எத்தனையோ வகையில் நாம் ஜோதிட பலன்கள் பற்றி தெரிந்து கொள்கிறோம்.

ஆனால் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் பொதுவான சிறப்பு பலன்களும் உள்ளது. அந்த வகையில், மாசி மாதத்தில் பிறந்தவர்களின் அதிர்ஷ்ட குணங்கள் எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம்.

மாசி மாதத்தில் பிறந்தவர்களின் சிறப்பு குணங்கள்

மாசி மாதம் என்பது சூரியன் கும்ப ராசியில் பிரவேசிக்கும் காலமாகும். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தியாக உணர்வு மிக்கவர்களாக இருப்பார்கள்.

குடும்பம் மற்றும் உறவுகளிடன் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வார்கள். அதே நேரத்தில் கௌரவம் பார்க்க வேண்டிய இடத்தில் பிடிவாதமாக இருப்பார்கள்.

எந்தவொரு காரியங்களை திட்டமிட்டு செய்வதில் வல்லமை மிக்கவர்கள். கலை, சாஸ்திர சம்பிரதாயங்களில் அதிக ஈடுபாடுடன் இருப்பார்கள்.

பொருளாதாரம்

குடும்பத்தில் சாதகமான சூழ்நிலை ஏற்படுவதற்கு, பொருளாதாரம் உயருவதற்கு தன்னலம் கருதாமல் உழைப்பார்கள்.

பணப்புழக்கம் எப்பொழுதும் இவர்களிடம் இருந்து கொண்டே இருக்கும். அதனால் சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவார்கள்.

ஆனால் கள்ளம் கபடம் இல்லாமல் வெளிப்படையாக எல்லாவற்றையும் பேசிவிடுவதால், இவர்களிடம் எதிர்மறையான எண்ணங்கள் இருக்காது.

தொழில்

எந்தவொரு விடயத்திலும் குறிக்கோளுடன் செயல்படுவதில் வல்லவராக இருப்பார்கள். சில நேரத்தில் மனதில் சந்தேக எண்ணங்கள், சஞ்சலங்கள் தோன்றினாலும் அதிலிருந்து விடுபட்டு தைரியமாக காரியம் சாதிப்பதில் கண்ணாக இருப்பார்கள்.

பெரிய பதவிகள், தலைமைப் பொறுப்புகள், இவர்களை தேடி வரும். காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறை ஆகியவற்றில் பணிபுரியும் வாய்ப்பு இவர்களுக்கு உள்ளது.

யோகம்

மாசி மாதத்தில் பிறந்தவர்களுக்கு, சொத்து சேரும் யோகம் பல வகைகளில் ஏற்படும். தாய்வழி உறவுகள் மூலம் சொத்துகள் கிடைக்கும்.

மாமா வகை உறவுகள் மூலமும், பெண்கள் மூலமும் உயில் அடிப்படையில் சொத்துகள் கிடைக்கும்.

பெரிய மாளிகை போன்ற வீடுகளில் வசிப்பதற்கும், பிளாட் போன்ற அடுக்குமாடி வீடுகளில் இருந்து வருமானங்கள் வருவதற்கும் இவர்களுக்கு யோகம் உள்ளது.

நோய்

இவர்களுக்கு சர்க்கரை அளவு அதிகமானால் குறைவது மிகவும் கடினம். நரம்பு, கண் தொடர்பான கோளாறுகள் இருக்கும். சைனஸ், தலைபாரம், வாதம், நீர்க்கோர்த்தல் போன்ற பிரச்சனைகள் மூலம் அடிக்கடி அவதிப்பட நேரிடும்.

மனைவி

இவர்களின் வாழ்க்கையில் பெரும்பகுதி பயணங்களில் கழியும். நண்பர்களுடன் சுற்றுலாக்கள் செல்வதை அதிகம் விரும்புவார்கள்.

மனைவி வகையில் இவர்களுக்கு சாதகம், பாதகம் இரண்டும் உள்ளது. குடும்ப விடயங்களில் இவர்கள் பிடிவாதமாக இருப்பது இரண்டு பேருக்கும் அடிக்கடி மனக்கசப்புக்கள் வந்து நீங்கும்.

சிலருக்கு நல்ல நிர்வாகத் திறமும், மதியூகமும் கொண்ட மனைவி அமைவார்கள். மனைவி மூலம் பேரும், புகழும், செல்வமும் வந்து சேரும்.

குழந்தைகள்

இவர்களுக்கு ஆண், பெண், குழந்தை வாரிசுகள் இருந்தாலும், பெண் குழந்தைகள் மூலம் யோகமும், செல்வாக்கும் கிடைக்கும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments