முதுகில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்ட பலன்கள் என்ன?

Report Print Printha in ஜோதிடம்
0Shares
0Shares
lankasri.com
advertisement

மச்சம் அழுத்தமான கறுப்பு நிறத்தில் இருந்தால், வாழ்க்கை எப்போதுமே உன்னத நிலையில் இருக்கும். இவ்வாறு இருப்பவர்கள் பிறக்கும்போதே நிம்மதியான சூழ்நிலையில் பிறப்பார்கள்.

கறுப்பு நிறம் ஆழ்ந்தில்லாமல் சற்று லேசாக இருந்தால், சிறிது அமைதியற்ற நிலையில் வாழ்க்கை கழியும். வருமானம் நிரந்தரமாக இராது.

advertisement

மச்சம் சாம்பல் நிறமாக இருப்பின், ஏதாவது ஒரு கலையில் நல்ல திறமை பெற்றுத் திகழ்வார்கள். வருமானம் பெரிய அளவில் இல்லாவிட்டாலும், வாழ்நாள் முழுவதும் நிச்சயமான நிரந்தரமான வருமானம் இருக்கும்.

பழுப்பு நிற மச்சமாக இருந்தால், இவர்களின் வாழ்க்கை இரும்பு, மரம் போன்ற பொருட்களோடு ஒட்டியதாக இருக்கும். இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தால், மகான்களாக, கல்விமானாக, விஞ்ஞானியாகப் புகழ்பெறுவார்கள்.

வெண்மை நிற மச்சம் இருப்பின் பலசாலிகளாகவும், துணிச்சல் மிக்கவராகவும், வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடுபவர்களாகவும் இருப்பார்கள்.

சற்று நீல நிறமான மச்சத்தைப் பெற்றோர், பழைமை விரும்பிகளாக இருப்பார்கள். வணிகத்துறையில் ஆர்வம் இருக்கும்.

குங்கும நிறமாக மச்சம் அமைந்திருந்தால், இவர்கள் உல்லாசப் பிரியர்கள். தந்திரமான நுண்ணறிவுடன் திகழ்வர். மஞ்சள் நிறமாக அமைந்திருக்குமானால் மிகவும் கலகலப்பான இயல்பு கொண்டவர்களாக, எல்லோரிடத்திலும் நட்புடன் பழகுவார்கள்.

நெற்றி மச்சம்

நெற்றியில் மச்சம் அமைவது விசேஷமான நிலை. ஞானத்துக்கான அம்சம். விருப்பம்போல் வாழ்க்கை அமையும். கணவனின்/மனைவியின் அன்பு வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்.

கண்களில் மச்சம்

வலது கண் புருவத்தில் மச்சம் அமைந்திருப்பின் அதிர்ஷ்டத்தின் சின்னமாகும். 30 வயதுக்கு மேல் அதிர்ஷ்டம் கொடுக்கும். இவர்கள் காதல் திருமணம் செய்துகொள்வார்கள் என்பது விதிமுறை.

இடது கண்ணில் மச்சம் உடையவர்கள் சுதந்திர மனப்பான்மை உடையவர்கள். பிறருக்குக் கட்டுப்பட்டு நடக்கமாட்டார்கள்.

மூக்கில் மச்சம்

இவர்கள் முன்கோபிகள்; சிடுசிடு சுபாவமிக்கவர்கள். மனைவி மக்களிடம் ஒருவித கெடுபிடியுடன் இருப்பார்கள். பெண்களுக்கு மூக்கு நுனியில் மச்சம் இருந்தால், சேவா மனப்பான்மை பெற்றிருப்பார்கள்.

அணிமணிகளில் விருப்பம் இருக்காது. திருமண விருப்பம்கூட இல்லாமல் சந்நியாசிபோல இருப்பார்கள்.

உதடுகளில் மச்சம்

உதடுகளில் உள்ள மச்சம் பெருஞ்செல்வத்தைக் குறிக்கும். தாராள பணப்புழக்கம் இருக்கும். சரஸ்வதி தேவியின் கடாட்சம் கிட்டும்.

கல்வியில் உயர்ந்த நிலையை எளிதில் அடைவார்கள். கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை போன்ற ஏதாவது ஒன்றில் பெரும்புகழை இவர்கள் எய்தக்கூடும். கட்டுப்பாடில்லாமல் இன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை இவர்களிடம் இருக்கும்.

முகவாயில் மச்சம்
advertisement

நல்ல அம்சமாகும். பெண்ணாக இருந்தால் நல்ல தைரியசாலியாக இருப்பார். ஜோதிடம், வைத்தியம் போன்றவற்றில் கைதேர்ந்தவர்கள். உடல்நலம் அடிக்கடி பாதிக்கப்படும். குடும்பவாழ்வு திருப்திகரமாக இருக்கும்.

செவிகளில் மச்சம்
advertisement

வலது செவியில் மச்சம் அமைந்திருப்பது, ஆண்களுக்கு நல்ல பலனைத் தரும். பெண்களுக்கு சுமாரான பலனையே தரும். பலவிதமான தொழில்களில் நல்ல பயிற்சியும், தேர்ச்சியும் இருக்கும். பெற்றோரிடமும் மனைவியிடமும் அதிக பாசம் இருக்கும்.

இடது பக்க செவியில் மச்சம் இருப்பது, ஆண்களுக்கு நல்ல பலனை அதிகம் தருவதில்லை. பெண்களுக்குச் சிறந்த பலனைத் தரும். பணி எதுவாயினும் முயற்சியுடன் வெற்றியடைவார்கள். பிற்பகுதி வாழ்க்கை இவர்கள் விரும்பியவாறு அமையும்.

நாக்கில் மச்சம்

அறிஞர்கள், மேதைகள், ஆராய்ச்சியாளர் கள், விஞ்ஞானிகள், மகான்கள் போன்றோருக்குத்தான் நாக்கில் மச்சம் இருக்கும்.

இவர்களுக்குத் தன்னம்பிக்கை அதிகம். உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இனியவர்களாக இருப்பார்கள். குழந்தை உள்ளம் படைத்தவர்கள்.

கழுத்தில் மச்சம்

கழுத்தில் மச்சம் உள்ள பெண்கள் அகன்ற முகமும், திரண்ட உருவ அமைப்பும், திடகாத்திரமும், நல்ல ஆரோக்கியமும் பெற்றுத் திகழ்வார்கள்.

யாருக்கும் அஞ்சாதவர்கள். எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருப்பார்கள். இவர்களுக்குப் பொறாமை குணம் கிடையாது.

முதுகில் மச்சம்

முதுகின் வலப்புறம் மச்சம் இருந்தால் பெரிய லட்சியவாதியாக இருப்பார்கள். எப்பொழுதும் சுறுசுறுப்புடன் இயங்குவர். வலப்புறம் மச்சம் உடைய பெண்கள், வேலை செய்து சம்பாதிப்பவர்களாக இருப்பார்கள்.

முதுகின் இடப்புறம் மச்சம் இருந்தால் இளமைப் பருவத்தில் மந்த நிலை ஏற்படும். கல்வி கற்பதில் இடையூறு, முயற்சிகளில் தோல்வி ஏற்படும்.

மார்பில் மச்சம்

பொதுவாக மார்பில் மச்சம் உடையவர்கள் இளமையில் பெரும் துன்பங்களை அனுபவித்து, பிற்கால வாழ்வில் நல்ல சுகத்தை அடைவர்.

மனத்தில் என்ன நினைக்கிறார்களோ அதை வெளிப்படையாக வாய் திறந்து சொல்லுவார்கள். வாழ்க்கையில் என்ன கஷ்டங்கள் ஏற்பட்டாலும், அதைப் பிறர் அறியாவண்ணம் சகித்துக்கொள்வார்கள். சிற்பம், மரவேலை போன்ற ஏதாவது ஒரு கலையில் சிறந்து விளங்குவார்கள்.

இடுப்பில் மச்சம்

வலப் பக்க இடுப்பில் மச்சம் இருப்பின் நேர்மையாளர்கள்; அளவுக்கு அதிகமாகப் பேசமாட்டார்கள். தங்களுடன் நெருங்கிப் பழகுபவர்களிடத்தில் அளவுகடந்து அன்பு செலுத்துவார்கள். இதேபோல், மற்றவர்களால் அன்பு செலுத்தப்படும்போது மனமுருகி அடிமையாகிவிடுவார்கள்.

இடப்பக்கம் மச்சம் இருப்பின், திடமான உள்ளம், கடுமையாக உழைக்கும் இயல்பைப் பெற்றிருப்பர். இவர்கள் பிறந்த இடத்தை விட்டு வெளி இடத்தில் வாழ்வை அமைத்துக்கொண்டால், வாழ்வில் நல்ல முன்னேற்றம் காணலாம்.

கள்ளம் கபடமற்றவர்கள். ஆனால், எதையும் நிதானித்துச் செய்யும் பொறுமை இல்லாததால், காரியம் கெடுவதற்கு வாய்ப்பு உண்டு.

தொடைகளில் மச்சம்

பொதுவாக, தொடைகளில் மச்சம் ஆண்களுக்கு நல்ல பலனைத் தரும். பெண்களுக்கு சுமாரான பலனையே தரும். வலது தொடையில் மச்சம் உடைய ஆண்கள் மனஉறுதி படைத்தவர்கள்.

advertisement

இன்பம், துன்பம் இரண்டையும் சமமாக பாவிப்பார்கள். இவர்கள் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு நடப்பார்கள். பிறர் எண்ணங்களைக் கண்டறியும் சக்தி படைத்தவர்கள்.

advertisement

இவர்களை யாருமே ஏமாற்ற முடியாது. இவர்களை யாராலும் புரிந்துகொள்ள இயலாது. கல்விப் பயிற்சியில் அக்கறையும் ஆர்வமும் காட்டமாட்டார்கள்.

இவர்களிடம் நேருக்கு நேர் உரையாடினால், ஜன்ம விரோதியாக இருந்தாலும் அவர் இவரிடம் சரணடைய வேண்டியதுதான்.

உள்ளங்கையில் மச்சம்

ஆண்களுக்கு வலது கையில் மச்சம் இருப்பது மிகவும் உயர்ந்த அம்சமாகும். வலது உள்ளங்கையில் மச்சம் இருப்பவர் சகல சாஸ்திரங்களிலும் வல்லவர்களாக இருப்பார் என்பது விதி.

குறிப்பாக கணித சாஸ்திரம், நீதி இயல், பொறியியல் போன்றவற்றில் ஆழ்ந்த அறிவுள்ளவர்கள். சிறுகச் சிறுக முன்னேறி உன்னதமான நிலையை அடைவார்கள்.

கை விரல்களில் மச்சம்

கைவிரல்களில் அமையும் மச்சங்களுக்கு ஏறத்தாழ ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே மாதிரியான பலன்கள்தான். கட்டைவிரலில் மச்சம் இருந்தால், எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பர்.

ஆள்காட்டி விரலில் மச்சம் இருந்தால், தலைமைப்பொறுப்பு வகிப்பவர்களாக இருப்பர். ஆட்சி அதிகாரம் செய்யக்கூடிய அம்சம் பெற்றவர்களாக இருப்பர். தன்னம்பிக்கை அதிகம் இருக்கும்.

நடுவிரலில் மச்சம் இருப்பின், கலை உள்ளம் படைத்தவர்களாக இருப்பர். குறிப்பாக வாய்ப்பாட்டு, இசைக்கருவிகள், நடனம், நாடகம் போன்றவற்றில் சிறந்து விளங்குவார்கள்.

மோதிர விரலில் மச்சம் அமைந்திருப்பின், அழகான தோற்றமும் அளவான உடல் அமைப்பும் அமைந்திருப்பது இயற்கை. எதையும் கூர்மையாக விளங்கிக்கொள்ளும் இயல்பு உண்டு. எதிர்ப்புகளை இவர்கள் முறியடிப்பார்கள்.

சுண்டு விரலில் மச்சம் இருந்தால், சரஸ்வதியின் அருள் பெற்றவர்கள் என்பது சாஸ்திர விதி. கல்வித் துறையில் இவர்களுக்கு மிகவும் உயர்ந்த தகுதி அமையும்.

எதிலும் முன்னெச்சரிக்கையாகச் செயல்படுவது இவர்களின் குணம். தனியார் பதவியில் உயர்நிலையில் இருப்பார்கள்.

அரசியல் துறையில் பேச்சாளராக இருத்தல், வழக்கறிஞராகப் பேரும் புகழும் அடைதல். இடது கை சுண்டு விரலில் மச்சம் இருந்தால், விகாரமான தோற்றத்தைப் பெற்று இருப்பார்கள்; பிடிவாத குணம் இருக்கும்.

மச்சங்களின் வடிவ லட்சணமும் பலன்களும்

மச்சம் உடலின் எந்தப் பகுதியில் இருந்தாலும், மிகச் சிறிய புள்ளி வடிவில் இருப்பின், அவர்களின் இயல்பு மர்மம் நிறைந்ததாக இருக்கும்.

யாருடனும் தாராளமாகக் கலந்து பழகமாட்டார்கள். தனிமையாக ஒதுங்கியிருப்பார்கள். அவர்களை யாராலும் புரிந்து கொள்ள முடியாது.

அவர் உயர்ந்த சிந்தனைவாதியாகவோ, அல்லது சமுதாயத்துக்குத் தொல்லை தரக்கூடிய குற்ற மனப்பான்மை உடைய நபராகவோ இருப்பார். வாழ்நாள் முழுவதும் பணப் பற்றாக்குறை இருக்கும்.

கலைத்துறையில் இருப்பவர்களுக்கு, மிளகின் அளவைவிட சற்று பெரிதான அளவில் மச்சம் அமைந்திருக்கும். ஏதாவது ஒரு வகையில் மகான்கள், அறிஞர்கள், மேதைகளாகத் திகழ்வார்கள். சொந்த வாழ்க்கையைப் பற்றிச் சிறிதும் கவலைப்படமாட்டார்கள்.

கொட்டைப் பாக்கு அளவு மச்சமிருப்பின் புரட்சிகரமான சாதனைகள் ஆற்றும் தீவிரவாதிகள். பிறருடைய கண்டிப்பும் எதிர்ப்பும் இவர்களுடைய லட்சிய நோக்கு என்ற தீபத்தைப் பிரகாசமாக எரியவிடும் எண்ணெயாக அமையும்.

- Vikatan

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments