International
Notification
Notification
Submit Cancel

உங்கள் கையில் இந்த 'H' ரேகை இருக்கா பாருங்க

Topics :
advertisement

ஜோதிடங்களில் பலவகை இருப்பது நாம் அறிவோம், அதில் பலரும் அதிகம் நம்புவது கைரேகை ஜோதிடம்.

நமது உள்ளங்கை ரேகைகளை வைத்து செல்வம், தொழில், இல்வாழ்க்கை, தனிநபர் குணாதிசயங்கள் கூறப்படும்.

அந்த வகையில் ஒரு நபரின் உள்ளங்கை ரேகையில் H என்ற எழுத்தை போல ரேகை இருந்தால் அவரது குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என நாம் இனி இங்கு காணலாம்.

  • "H" ரேகையானது மூன்று ரேகைகளின் இணைப்பில் உருவாகியிருக்கும் ரேகையாகும். இது இதயம், அதிர்ஷ்டம் மற்றும் தலை ரேகைகளின் இணைப்பை கொண்டது.
  • இந்த "H" ரேகை கொண்டிருப்பவர்கள், அவர்களது வாழ்வில் நாற்பது வயதுக்கு மேல் வெற்றிகரமாக திகழ்வார்கள். நாற்பது வயதுக்கு பிறகு அவரது வாழ்வில் ஒரு பெரிய திருப்பம் உண்டாகும்.
  • நாற்பது வயதுக்கு மேல் அவர்களது வாழ்வில் திடீர் பொருளாதார எழுச்சி காண்பார்கள். அவர்களது பெரும்பாலான முயற்சிகள் மற்றும் வேலைகள் அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்.
  • தாங்கள் விரும்பும், காதலிக்கும் நபர்களுக்கு, எதிர்பார்ப்பை தாண்டி அதிகம் உதவுவார்கள். ஆரம்ப காலத்தில் இவர்களுக்கு அதிர்ஷ்டம் என்று எதவும் உதவி இருக்காது. ஆயினும் இவர்கள் தங்கள் நம்பிக்கையை இழக்க மாட்டார்கள்.
  • நீங்க நாற்பது வயதுக்கு முன்னே முயற்சி செய்த கடின உழைப்பிற்கான பயன்கள் கூட நாற்பது வயதிற்கு பிறகு உங்களை வந்தே சேரும்.
  • இந்த "H" ரேகை இருக்கும் நபர்கள் இயற்கையாகவே உணர்ச்சிவசப்பட கூடிய நபர்களாக இருப்பார்கள்.
  • இவர்கள் எப்போதும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டிருப்பார்கள். இவர்களது தாராள மனதால், மக்கள் இவர்களை ஏமாற்றவும் செய்வார்கள்.
  • இந்த "H" ரேகை கொண்டிருப்பவர்கள் வாழ்வில் அதிக கடின சூழல்களை கடந்து வந்திருப்பார்கள். தடங்கல், இடையூறுகள் என இவர்கள் செல்லும் பயணத்தில் பல இடைஞ்சல்கள் கடந்திருப்பார்கள்.
  • "H" ரேகை இருக்கும் நபர்கள் அதிக தன்னம்பிக்கை மற்றும் நேர்மறை எண்ணங்கள் கொண்டிருப்பார்கள். இதனால் இவர்கள் கடினமாக, விடாப்படியாக உழைத்து கொண்டே இருப்பார்கள்.
  • அறிவாளி என்பதை தாண்டி, இவர்களிடம் புத்திகூர்மை சிறப்பாக இருக்கும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

advertisement
Send Feedback
Arbin
Journalist
advertisement
advertisement