ராகு-கேது பெயர்ச்சி: எந்தெந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?

Report Print Printha in ஜோதிடம்
6909Shares
6909Shares
lankasrimarket.com

நவக்கிரகங்களில் ராகுவும், கேதுவும் சாயக் கிரகங்கள் என்று கூறப்படுகிறது. இந்த கிரகங்களை பின்னோக்கி சென்று பெரும்பலனை நமக்கு அள்ளி தந்தால், தான் நாம் முன்னோக்கிச் செல்ல முடியும்.

ஒருவருடைய ஜாதகத்தில் ராகு பலன் பெற்று அமைந்தால், அவர்களுக்கு ராகு பலன்களை அள்ளிக் கொடுப்பார். அவர்கள் நல்ல பொருளாதார நிலையை அடைவார்கள். அதே போல் ஒருவர் ஜாதகத்தில் கேது பலம் பெற்று அமைந்தால், நல்ல அறிவாற்றல் கிடைக்கும்.

ஜாதகத்தில் லக்னம் அல்லது சந்திரனுக்கு 2, 4, 7, 8,12 ஆகிய இடங்களில் ராகு-கேது இருந்தால், திருமணத் தடைகள், புத்திர பாக்கிய தடைகள், குடும்ப ஒற்றுமை குறைவு, போன்றவை ஏற்படும்.

இந்த ராகு-கேது பெயர்ச்சியினால், ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் பலவிதமான பலன்கள் இருக்கும். இந்த பெயர்ச்சியினால், எந்த ராசிக்காரர்களுக்கு பலன் என்பதை பார்ப்போம்...

ராகு-கேது பெயர்ச்சியினால் அதிர்ஷ்டம் கிடைக்கும் ராசிகள்?

ராகு-கேது பெயர்ச்சியினால் மேஷம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு மற்றும் கும்பம் போன்ற ராசிகளுக்கு அதிர்ஷ்டம் உள்ளது.

இந்த ராசிக்காரர்களுக்கு பாராட்டு, நினைத்த காரியம் கைகூடுதல், நல்ல தொழில் இது போன்ற அனைத்திலும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

மேலும் இவர்களுக்கு இதுவரை இருந்த பிரச்சனைகள் நீங்கும். திருமண வயதுள்ளவர்களுக்கு திருமணம் கைகூடும். பொன், பொருள், குடும்ப ஒற்றுமை போன்றவை அதிகரிக்கும்.

பரிகாரம் மூலம் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்?

ராகு-கேது பெயர்ச்சியில் பரிகாரம் செய்வதன் மூலம் ரிஷபம், மிதுனம், கடகம், விருச்சிகம், மகரம் மற்றும் மீனம் போன்ற ராசிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

இந்த ராசிக்காரர்கள் கடவுள் சன்னதிகளுக்கு சென்று வழிபட்டு வந்தால், இன்னும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். அதுவும் நல்ல நாள் பார்த்து வழிபட்டால், நற்பலன்கள் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்