குருபெயர்ச்சியினால் யோகம் அடிக்கும் ராசி? பலன்கள் இதுதான்

Report Print Printha in ஜோதிடம்
0Shares
0Shares
lankasrimarket.com

ஜோதிடத்தில் குரு பகவான் எந்த ராசியில் இருந்து எந்த ராசிக்கு மாற்றம் அடைகிறார்? அதனால் என்னென்ன பலன்கள் உண்டாகும் என்பதை பார்க்கலாம்.

2017-ம் ஆண்டிற்கான குரு பெயர்ச்சியானது, ஆவணி மாதம் 17-ஆம் நாள், ஆங்கிலத்தில் 02.09.2017 சுக்ல ஏகாதசியும் சனிக்கிழமையும் பூராட நட்சத்திரமும் நாமயோகமும் பத்ரை கரணமும் சித்தயோகமும் கூடிய சுயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 08.20- காலை 9.21க்கு குரு பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு மாறுகிறார்.

குரு பெயர்ச்சியினால் கிடைக்கும் பலன்கள்?

குரு பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைவதால் பக்தி, சிரத்தை வழிபாடு, புனித சிந்தனை, யாத்திரை, நல்லொழுக்கத்தை கடைபிடித்தல் போன்ற விடயத்தில் துலாம் ராசிக்காரர்கள் சிறந்து விளங்குவார்கள்.

ஒழுக்கசீலராக இருப்பவர்களின் ஜாதகத்தில் குரு பலம் பெற்றிருப்பார், உலகத்தார் அனைவரும் ஒருவரை மதிக்கிறார்கள் என்றாலும் அவரின் ஜெனன கால ஜாதகத்தில் குரு பலம் நிறைந்திருக்கிறது என்று பொருள்.

அரிய சாதனைகளை செய்வதற்கு குரு பலமே பிரதானமாக இருக்கிறது, வேத சாஸ்திரம், விஞ்ஞானம் ஆகியவற்றில் புகழ் அடைவதற்கு குருபலமே முக்கிய காரணமாகும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்