குருபலன் இல்லாமல் திருமணம் நடந்தால்... பலன்கள் என்ன?

Report Print Printha in ஜோதிடம்
0Shares
0Shares
lankasri.com

குருபலன்கள் இல்லாத நேரத்தில் திருமணம் நடத்தினால் அந்த தம்பதிகளுக்கு கிடைக்கும் பலன்கள் என்னவென்பதை பற்றி பார்க்கலாம்...

கோச்சார முறையில் ஒரு தம்பதியர், ஜாதகத்தில் ஜனன ராசியில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் ஜாதகருக்கு திருமணம் நடைபெற்றால் அவர்களுக்கு சந்தான பாக்கியம் இருக்காது. ஒருவேளை கிடைத்தாலும் மரணம் அடையும் என்பது ஜோதிட சாஸ்திர விதியாகும்.

 • ஜனன ராசிக்கு 2-ம் இல்லத்தில் குருபக்வான் சஞ்சரிக்கும் காலத்தில் ஜாதகருக்கு திருமணம் நடைபெற்றால், அவர்கள் தன தானிய சம்பத்து அடையப்பெறுவர் என்பதாகும்.

 • ஜனன ராசிக்கு 3-ம் இல்லத்தில் குருபக்வான் சஞ்சரிக்கும் காலத்தில் ஜாதகருக்கு திருமணம் நடைபெற்றால், அத்தம்பதியர் வைதவ்வியம், சோரம், மரணம் அடையப் பெறுவர்.

 • ஜனன ராசிக்கு 4-ம் இல்லத்தில் குருபக்வான் சஞ்சரிக்கும் காலத்தில் ஜாதகருக்கு திருமணம் நடைபெற்றால், அத்தம்பதியர் ஏட்டிக்கு போட்டியாக குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு வாழ்க்கை முழுவதும் அவதிப்படுவார்கள்.

 • ஜனன ராசிக்கு 5-ம் இல்லத்தில் குருபக்வான் சஞ்சரிக்கும் காலத்தில் ஜாதகருக்கு திருமணம் நடைபெற்றால், அத்தம்பதியர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைப்பதோடு குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.

 • ஜனன ராசிக்கு 6-ம் இல்லத்தில் குருபக்வான் சஞ்சரிக்கும் காலத்தில் ஜாதகருக்கு திருமணம் நடைபெற்றால், அவர்களுக்கு வைதவ்வியம், சோரம், வாழ்க்கை முழுவதும் அசுபப் பலன்களை அடையப் பெறுவார்கள்.

 • ஜனன ராசிக்கு 7-ம் இல்லத்தில் குருபக்வான் சஞ்சரிக்கும் காலத்தில் ஜாதகருக்கு திருமணம் நடைபெற்றால், அத்தம்பதியர் மற்றும் அப்பெண் தீர்க்க சுமங்கலி என்ற அமைப்பை அடைவார்கள்.

 • ஜனன ராசிக்கு 8-ம் இல்லத்தில் குருபக்வான் சஞ்சரிக்கும் காலத்தில் ஜாதகருக்கு திருமணம் நடைபெற்றால், அத்தம்பதியர் புத்திர பாக்கியமின்மை மற்றும் புத்திர சேதம் அடைவார்கள்.

 • ஜனன ராசிக்கு 9-ம் இல்லத்தில் குருபக்வான் சஞ்சரிக்கும் காலத்தில் ஜாதகருக்கு திருமணம் நடைபெற்றால், அத்தம்பதியர் அனைத்து விதமான சௌபாக்கியத்தையும் பெறுவார்கள்.

 • ஜனன ராசிக்கு 10-ம் இல்லத்தில் குருபக்வான் சஞ்சரிக்கும் காலத்தில் ஜாதகருக்கு திருமணம் நடைபெற்றால், அத்தம்பதியர்களுக்கு புத்திர பாக்கியம் இருக்காது. மேலும் இவர்கள் வாழ்நாள் முழுவதும் அசுபப் பலன்களையே பெறுவார்கள்.

 • ஜனன ராசிக்கு 11-ம் இல்லத்தில் குருபக்வான் சஞ்சரிக்கும் காலத்தில் ஜாதகருக்கு திருமணம் நடைபெற்றால், அத்தம்பதியர் தனலாபம், சகல சம்பத்தும், அனைத்து சௌபாக்கியத்தையும் பெறுவார்கள்.

 • ஜனன ராசிக்கு 12-ம் இல்லத்தில் குருபக்வான் சஞ்சரிக்கும் காலத்தில் ஜாதகருக்கு திருமணம் நடைபெற்றால், அத்தம்பதியர்களுக்கு புத்திர பாக்கியம் 100% இருக்காது. மலட்டுத்தன்மை, கஷ்டமான குடும்ப வாழ்க்கை ஆகிய பலன்களை பெறுவார்கள்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்