தங்கம் வாங்கும் யோகம் உங்களுக்கு உள்ளதா?

Report Print Printha in ஜோதிடம்
0Shares
0Shares
lankasrimarket.com

வாழ்நாள் முழுவதும் தங்க அணிகலன்களுடம் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழும் யோகம் யாருக்கு அமையும் என்றும் நம் வீட்டில் தங்கம் சேர என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி காணலாம்.

தங்கம் வாங்கும் யோகம் யாருக்கு?
  • லக்னத்திற்கு 3-ம் பாவத்தின் சுக்கிரன் நிற்கவும், 3-ம் வீட்டிற்கு உரிய கிரகம் சுக்கிரன் வீட்டில் நிற்கவும் அமைந்துள்ள ஜாதகம் உள்ளவர்கள், முத்துமாலை அணியும் யோகம் கொண்டவர்கள்.
  • லக்னத்திற்கு 3-ம் வீட்டில் சந்திரனும், 5-ம் வீட்டில் குருபகவானும் வலிமை பெற்று அமைந்தால், அந்த ஜாதகம் உள்ளவர்கள், நவரத்தின மாலை அணியும் யோகத்தை கொண்டவர்கள்.
  • லக்னத்திற்கு 3-ம் வீட்டில் கேது நின்று, 3-ம் வீட்டில் கிரகமும், 2-ம் வீட்டிற்கு உரிய கிரகமும், 9-ம் வீட்டில் சேர்ந்திருக்கும் அமைப்பை பெற்ற ஜாதகம் உள்ளவர்கள், எப்போதும் நவரத்திங்கள் அமையும் யோகம் இருக்கும்.
  • லக்னத்திற்கு 8-ம் வீட்டிற்கு உரிய கிரகம் மற்றும் ராகுவும் சேர்ந்து 9-ம் வீட்டில் நிற்கும் அமைப்பை கொண்ட ஜாதகம் உள்ளவர்கள், இடைப்பட்ட வயதில் பொன் ஆபரணங்களை அணியும் யோகத்தை பெறுவார்.
  • ஒருவரின் பிறப்பு ஜாதகப்படி, சந்திரன் நின்ற வீட்டிற்கு 2-ம் வீட்டிற்குரிய கிரகம், லக்னத்திற்கு உரிய ஸ்தானமான 12-ம் வீட்டில் நின்று, அந்த கிரகத்தை செவ்வாய் பார்க்கும் ஜாதக அமைப்பை உடையவர்கள், ஏராளமான ஆடை ஆபரணங்கள் இருந்து அதை அணியாமல் எளிமையாக வாழ்வார்கள்.
  • ஜாதகத்தில் 3-ம் வீட்டிற்கு உரிய கிரகம், 8-ம் வீட்டில் நின்று, 8-ம் வீட்டிற்கு உரிய கிரகம்3-ம் வீட்டில் நின்று, அமையும் ஜாதக அமைப்பினைக் கொண்டவர்கள் தங்க நகைகள் மீது பற்று கொண்டவராக இருப்பார்கள். ஆனால் அதை அணிய அவர்களிடம் வசதி இருக்காது.
வீட்டில் தங்கம் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?
  • குளிகை காலத்தில் தங்க நகைகளை வாங்கி அணிந்துக் கொண்டால், மீண்டும் மீண்டும் வாங்கும் யோகம் உண்டாகும்.
  • தங்கத்திற்கு உரிய குரு பகவான் என்பதால், வியாழன் கிழமை குரு பகவானை வணங்கி வந்தால் வீட்டில் தங்கம் சேரும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்