உங்களுடைய கைரேகை இப்படி இருக்கா? எதிர்காலத்தை கணிக்கலாம்

Report Print Fathima Fathima in ஜோதிடம்
0Shares
0Shares
lankasrimarket.com

எதிர்காலத்தை கணிக்கக்கூடியவர்களின் கையில் சாலமன் ரேகை அல்லது சக்தி ரேகை இருக்கும்.

ஆள் காட்டி விரலானது குரு பகவானுக்கு உரியது, அந்த விரலுக்கு கீழ் உள்ள மேடு குரு மேடு என அழைக்கப்படுகிறது.

அந்த மேட்டில் நேர் ரேகைகள் இருந்தாலோ, முக்கோணக் குறியீடு இருந்தாலோ, நட்சத்திரக் குறியீடு இருந்தாலோ அவர்கள் எதிர்காலத்தை கணிக்கக்கூடிய ஆற்றல் பெற்றவர்களாம்.

குரு மேடு உயர்ந்து நின்றிருந்தாலே ஆசிரியராவார்கள். ஆலோசனை வழங்குதல், உளவியல் நிபுணராகுதல், கவுன்சிலிங், சோர்ந்து வருபவர்களை, அதாவது மன உளைச்சலோடு வருபவர்களை வழிநடத்தி செல்லுதல் போன்றவற்றில் சிறந்து விளங்குவர்.

மேலும் புத்தி ரேகை, குரு மேட்டில் இருந்து ஆரம்பித்தாலும் அல்லது புத்திரேகையில் இருந்து ஒரு சிறிய ரேகை குரு மேட்டை நோக்கிச் சென்றாலும் புத்திசாலியாகவும், திட்டமிட்டு செயலாற்றுபவர்களாகவும் இருப்பார்கள்.

நேர்மை, எழுத்துத் திறமை, கலைத் திறமை, சிறப்பான வாழ்க்கையும் அமையும்.

இதேபோன்று உள் செவ்வாய் மேடு மற்றும் சந்திர மேடு ஆகியவை முடிவடையும் இடத்திலும் நட்சத்திரக் குறியீடு அல்லது நாற்கரக் குறியீடு இருந்தாலும் எதிர்காலத்தை கணிக்கலாம்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்