சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்கு ஆபத்து தெரியுமா?

Report Print Printha in ஜோதிடம்
2972Shares
2972Shares
lankasrimarket.com

சனி பகவான் ஒரு ராசியில் சராசரியாக இரண்டரை ஆண்டுகள் சஞ்சரிப்பார். இந்த ஆண்டு நிகழப்போகும் சனிப்பெயர்ச்சியால் சனிபகவான் எந்தெந்த ராசியில் என்ன சனியாக சஞ்சாரம் செய்யப் போகிறார் என்பதை பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இது பாக்கிய சனியாகும். தந்தை, தந்தை வழி உறவினர்களுடன் கருத்து மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. பணப்பிரச்சனை அதிகரிக்கும்.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு அடுத்த இரண்டரை வருடத்திற்கு அஷ்டம சனி வரப்போகிறது. எனவே அனைத்து விடயங்களிலும் கவனமாக இருப்பது மிக நல்லது.

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு கண்டக சனியாகும். எனவே வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. வாழ்க்கைத் துணையுடன் தேவையற்ற மனச் சஞ்சலங்கள் ஏற்படும்.

கடகம்

கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த சனிப் பெயர்ச்சியால் ரண ருண சனி ஏற்படுகிறது. அது உடல்நலத்தை பாதிக்கும். எனவே உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை.

சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்களுக்கு இது பஞ்சம சனியாகும். குழந்தைகளுடன் தேவையில்லாத வாக்குவாதம் ஏற்படும். அதனால் பொறுமையுடன் கையாளுவது மிகவும் நல்லது.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இது அர்த்தாஷ்டம சனியாகும். இதனால் இவர்கள் வீடு, மனை, வாகனம் ஆகியவை வாங்குவதற்கு தடை ஏற்படும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து முற்றிலுமாக விடுதலை பெறுவார்கள். இது தைரிய வீரிய சனியாகும். அதனால் இந்த ராசிக்காரர்கள் எந்த காரியத்தை துணிச்சலாகவும், தைரியமாகவும் செய்து முடிப்பார்கள்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இது வாக்குச் சனியாகும். அதனால் இவர்கள் யாருக்கு வாக்கு கொடுப்பதாக இருந்தாலும் பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. எனவே கவனமாக இருப்பது மிக நல்லது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு அடுத்த இரண்டரை வருடத்திற்கு சஞ்சரிக்க போகிறார். அதனால் இவர்களுக்கு ஜென்ம சனியாகும். எனவே இவர்கள் அனைத்து விடயத்திலும் அதிக கவனத்துடன் இருப்பது நல்லது.

மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்க உள்ளது. இது இவர்களுக்கு விரையச் சனியாகும். அதனால் தேவையற்ற வீண் செலவுகள், விரையங்கள் ஏற்படும்.

கும்பம்

கும்பம் ராசிக்காரர்களுக்கு இது லாப சனியாகும். அதிக முயற்சிக்கு பின் லாபம் அதிகரிக்கும். எனவே இவர்களுக்கு வீடு வாங்கும் யோகம் உண்டாகும்.

மீனம்

மீனம் ராசிக்காரர்களுக்கு இது தொழில் சனியாகும். அதனால் இந்த ராசி உள்ளவர்களின் தொழிலில் சிறிது சிறிதாக முன்னேற்றம் ஏற்படும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்