இந்த ஒரு நட்சத்திரக்காரர்கள் மட்டும் கடுமையாக...?

Report Print Printha in ஜோதிடம்
779Shares
779Shares
lankasrimarket.com

ஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் மட்டும் தங்களின் வாழ்க்கையில் கடுமையாக உழைப்பவர்களாக திகழ்வார்களாம்.

அதுவும் இந்த பூரட்டாதி நட்சத்திரமானது கும்பம் மற்றும் மீனம் ராசியினருக்கு அமையும். இத்தகையவர்களின் பொதுவான குணநலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்..

பூரட்டாதி நட்சத்திரக்காரரின் குணாதிசயங்கள்?

பூரட்டாதி நட்சத்திரம் உள்ளவர்கள் சில சமயம் சமாதானப் பிரியராக இருப்பார்கள். அதுவே பல சமயம் சண்டை பிரியராகவும் இருப்பார்கள்.

இவர்களின் செய்கை எப்போதும் விநோதமாக இருக்கும். அது மற்றவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாதவையாக இருக்கும்.

சம்பிரதாயங்களில் அதிக நாட்டம் இருக்காது. தங்களுக்கு வேண்டியவர்களுக்காக எதையும் செய்யும் மனப்போக்கு உள்ளவர்கள்.

இவர்கள் வாழ்க்கையில் வசதி வாய்ப்பு எப்படியும் வந்துவிடும். இவர்களுக்கு தேவைக்கு அதிகமாக தேடி அலையும் குணம் இருக்காது.

பிறவிலேயே இவர்கள் புத்திசாலியாக இருப்பதால், எந்த வேலையில் இருந்தாலும் பிரகாசிக்க கூடியவர்களாக இருப்பார்கள்.

அழகான மற்றும் சாதுரியமான பேச்சுக்களால் அனைவரையும் கவரக் கூடியவர்கள்.

எதிர்கால திட்டங்களில் மிகுந்த கவனம் கொண்ட இவர்கள், வெற்றிக்காக கடுமையாக போராடக் கூடியவர்களாக இருப்பார்கள்.

வாதம் செய்வதில் வல்லவராக இருப்பார்கள். கல்வி கேள்விகளில் ஞானம் உள்ளவராக இருப்பார்கள்.

ஆன்மீக ஈடுபாட்டில் விருப்பம் கொண்ட இவர்கள், பிறரின் மனதை புரிந்துக் கொண்டு அனைவரிடமும் எளிதில் பழகக்கூடியவராக இருப்பார்கள்.

இந்த நட்சத்திரக்காரர்களுக்கு குழந்தை பிறந்த பிறகு அப்பாவின் அந்தஸ்து அதிகரிக்கும். இவர்கள் இளமை காலம் தொட்டே வளர்ச்சிப் பாதையில் பயணிப்பார்கள்.

25-30 வயது வரை குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு முன்னேற்றம் இருக்கும். ஆனால் 40 வயதிற்கு மேல் பொன்னான காலமாக அமையும்.

இவர்களின் குடும்ப வாழ்க்கையில் அன்பு, அரவணைப்பு இருக்கும். மற்றவர்களுக்கு உதாரண தம்பதிகளாக வாழ்வார்கள்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்