இன்று மிக கவனத்துடன் இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் இவர்கள் தான்!

Report Print Kabilan in ஜோதிடம்
0Shares
0Shares
lankasrimarket.com

இன்று எந்தெந்த ராசிக்காரர்கள் எந்தெந்த விடயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து இங்கு காண்போம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் தாங்கள் செய்யும் வேலையில் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். பணியிடத்தில் சக ஊழியர்களிடம் நிதானமாக நடந்துகொள்ள வேண்டும்.

கடகம்

கடக ராசிக்காரர்களின் பணியில் அலைச்சல்கள் உண்டாகும். இவர்களுக்கு எதிர்பாராத வீண் செலவுகள் உண்டாகும். தங்களது பணியில் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். வேலை ஆட்களால் சாதகமற்ற சூழல் உண்டாகும் என்பதால், இந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். இவர்கள் குடும்ப உறுப்பினர்களிடம் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். விலையுயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் தேவை. அண்டை வீட்டாரிடம் தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது அவசியம்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களால் குழப்பமான சூழல் உண்டாகும். தேவையற்ற வாதத்தால் இவர்களுக்கு பகைமை உண்டாகும். எனவே பேசுகையில் மிக கவனமாக இருக்க வேண்டும். புதிதாக முதலீடு செய்யும்போது, பெரியோர்களின் ஆலோசனைகளை ஏற்று செயல்பட வேண்டும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்