பல் ஜோதிடம் பார்ப்போம் வாங்க

Report Print Trinity in ஜோதிடம்
406Shares
406Shares
lankasrimarket.com

நமது பற்கள் நமது ஆரோக்கியத்தை மட்டும் வெளிக்காட்டுவதில்லை, நமது எதிர்காலத்தையும் சேர்த்தே கூறுகிறது.

அழகான புன்னகை எப்பேர்ப்பட்ட விதியையும் மாற்றி விடும் என்றாலும், பற்களின் அமைப்பு மூலம் நமது வாழ்வை பற்றியும் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

பற்களின் இடையே இடைவெளி இருந்தால் நாம் கூச்சமாக நினைப்போம், ஆனால் அவ்வாறு இடைவெளி உள்ள பற்கள் அதிர்ஷ்டத்தை கொண்டு வரும். இவர்கள் துணிச்சல் மிக்கவர்கள், மிகவும் அதிர்ஷ்டக்காரர்.

பற்களின் இடையே உள்ள இடைவெளிகளை மருத்துவர் துணையுடன் சரிசெய்ய நினைத்தால் நீங்கள் உங்கள் அதிர்ஷ்ட வாய்ப்புகளை இழக்கிறீர்கள் என்று தான் அர்த்தம்.

முன் பற்களுக்கு இடையே இடைவெளி இருந்தால் நீங்கள் மிகவும் நம்பிக்கையானவர்கள் மற்றும் தைரியமானவர்கள், மற்றவர்களால் முடியாத செயலையும் முடித்து காட்டுவார்கள்.

பற்களுக்கிடையே இடைவெளி கொண்டவர்கள் எந்த காரியத்தை எடுத்தாலும் வெற்றியுடன் அதனை முடிப்பார்கள்.

முன்பற்களுக்கு இடையே இடைவெளி இருப்பவர்கள் புத்திசாலி மற்றும் கற்பனை வளம் மிக்கவர்கள், மேலும் எதையாவது சாதிக்க வேண்டும் என்கிற வைராக்கியத்தோடு இருப்பார்கள்.

பற்களின் நடுவே இடைவெளி இருப்பவர்கள் சிறந்த பேச்சாளர்கள் ஆக இருப்பார்கள், இடைவெளி உள்ள பற்களை கொண்டவர்கள் நல்ல நிதி மேலாளர்களாகவும் இருப்பார்கள்.

நிதி பிரச்னைகள் வரும்போது பயனுள்ள வகையில் அதனை சரி செய்வார்கள், சேமிப்பு பழக்கமும் இவர்களிடம் இருக்கும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்