இரண்டு மணி நேரம் ரோலர் கோஸ்டரில் சிக்கிய 20 பேர்: அவுஸ்திரேலியாவில் அதிர்ச்சி சம்பவம்

Report Print Arbin Arbin in அவுஸ்திரேலியா
0Shares
0Shares
lankasri.com
advertisement

அவுஸ்திரேலியாவில் உள்ள மூவி வோர்ல்ட் விளையாட்டு பூங்காவில் ரோலர் கோஸ்டரில் சிக்கிய 20 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

விளையாட்டு பூங்காகாவிற்கு செல்லும் அனைவரும் ரோலர் கோஸ்டரில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுவது வழக்கம். திரில்லான அனுபத்தை தரும் ரோலர் கோஸ்டர் சில சமயங்களில் ஆபத்திலும் முடிகிறது.

advertisement

அவுஸ்திரேலியாவில் உள்ள மூவி வோர்ல்ட் விளையாட்டு பூங்காவில் ரோலர் கோஸ்டரில் 20 பேர் பயணம் செய்துள்ளனர். அப்போது சங்கிலியில் ஏற்பட்ட பிரச்னையால் ரோலர் கோஸ்டர் பாதியிலேயே நின்றுவிட்டது.

இதனால் ரோலர் கோஸ்டரில் பயணம் செய்த 20 பேரும் ரோலர் கோஸ்டரின் பாதியிலேயே சிக்கிக் கொண்டனர்.

இதனையடுத்து மீட்புக் குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த மீட்பு குழுவினர் சுமார் 2 மணி நேரமாக ரோலர் கோஸ்டரில் சிக்கி தவித்த அவர்களை பத்திரமாக மீட்டனர்.

மீட்கப்பட்ட 20 பேருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என விளையாட்டு பூங்கா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல கடந்த ஆண்டு இதே பகுதியில் மற்றொரு பூங்காவில் நிகழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments