கடலுக்குள் காணாமல் போன அவுஸ்திரேலிய பிரதமர்: தொடரும் மர்மம்

Report Print Deepthi Deepthi in அவுஸ்திரேலியா
0Shares
0Shares
lankasrimarket.com

அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் Harold Edward Holt பற்றி இன்று வரை அந்நாட்டு மக்கள் பேசுவதற்கு அவர் ஆட்சிகாலத்தின் போது மர்மமான முறையில் காணாமல் போனதே காரணம் ஆகும்.

1966 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் பிரதமராக Harold Edward Holt பதவியேற்றார்.

இவரின் ஆட்சிகாலம் ஒரு ஆண்டு மட்டுமே நீடித்தது. இவர் மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் என இவரது மனைவி வெளி உலகத்திற்கு பகிரங்கமாக அம்பலப்படுத்தி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

நீச்சலடிப்பதில் அதிக ஈடுபாடு கொண்ட இவர், 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் திகதி விக்டோரியாவில் உள்ள Cheviot கடற்கரைக்கு, தனது மனைவி Marjorie Gillespie, மகள் Vyner மற்றும் குடும்ப நண்பர்களுடன் சென்றுள்ளார்.

கடற்கரைக்கு சென்ற இவர், தான் நீச்சலடிக்கப்போவதாக கூறிவிட்டு கடலுக்குள் சென்றுள்ளார். ஆனால், வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை. காணமால் போன இவரை கடற்பரை அதிகாரிகள் தேடியுள்ளனர்.

சுமார், 2 நாட்கள் தேடுதல் நடத்தியும் இவர் கிடைக்கவில்லை. இறுதியில், நம் நாட்டின் பிரதமர் காணாமல் போய்விட்டார் என்ற தகவல் அந்நாட்டு மக்களிடம் தெரிவிக்கப்பட்டது.

இவர் என்ன ஆனார்? இவர் இறந்துவிட்டால் இவரது உடல் எங்கே என்பது குறித்த கேள்விகேளோடு இன்று வரை மர்மம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

ஆனால், இவர் குறித்து வேறு சில தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இவர் 1929 ஆம் ஆண்டு முதல் சீன உளவாளியாக இருந்தார் என்றும், அந்நாட்டு அரசு இவரை கப்பலின் வாயிலாக பீஜிங்குக்கு அழைத்து சென்றது எனவும் கூறப்பட்டது.

மற்றொரு தகவலாக இவர் தனது காதலியுடன் சுவிட்சர்லாந்து சென்று அங்கு வாழ்ந்து வந்தார் என்றும் கூறப்பட்டது.

ஆனால் அவுஸ்திரேலியாவில் இவரின் பதவிக்காலத்தை குறிப்பிட்டு, காணாமல் போய்விட்டார் என்று பதாகையே வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments