அவுஸ்திரேலியாவில் இந்திய கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த அநியாயம்: வைரல் வீடியோ

Report Print Deepthi Deepthi in அவுஸ்திரேலியா
0Shares
0Shares
lankasrimarket.com

அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் இந்திய தம்பதியர் மீது அந்நாட்டை சேர்ந்த பெண் இனவெறி பாகுபாடு காட்டிய வீடியோ வைரலாக பரவியுள்ளது.

இந்தியாவை சேர்ந்த உட்சவ் படேல் என்பவர் அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். இவர் கர்ப்பிணியாக இருக்கும் தனது மனைவியை அழைத்துக்கொண்டு பூங்காவிற்கு சென்றுள்ளார்.

பூங்காவில் உள்ள இருக்கையில் அவுஸ்திரேலிய பெண் ஒருவர் அமர்ந்திருந்துள்ளார். அப்போது படேல், சற்று தள்ளி அமர்ந்து எனது மனைவிக்கு கொஞ்சம் இடம் தாருங்கள் என கேட்டுள்ளார்.

அதற்கு, அப்பெண் தூரமாக செல்....நீ இந்தியன் தானே உனக்கு இடம் கிடையாது என கோபமாக கூறியுள்ளார். அதற்கு படேல் இங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகளிடம் முறையிடுவேன் என கூறுகிறார்.

அதற்கு அப்பெண், போய் சொல் பரவாயில்லை. எனக்கு இந்தியனை பிடிக்காது என மீண்டும் கோபமாக கூறியுள்ளார். இவை அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்த படேல் அதனை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை அறிந்த New South Wales பொலிஸ் படேலை தொடர்பு கொண்டு, நடந்தவற்றை அறிந்துள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தப்போவதாகவு தெரிவித்துள்ளனர்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments