மனைவியை கொன்று குக்கரில் சமைத்த கணவன்: பொலிசார் அதிர்ச்சி தகவல்

Report Print Peterson Peterson in அவுஸ்திரேலியா
0Shares
0Shares
lankasrimarket.com

அவுஸ்திரேலியா நாட்டில் மனைவியை கொலை செய்த கணவன் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி குக்கரில் சமைக்க முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லேண்ட் நகரில் தான் இந்த கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதே நாட்டை சேர்ந்த Marcus Volke(27) என்பவர் இந்தோனேசியாவை சேர்ந்த Mayang Prasetyo(23) என்பவரை கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் செய்துள்ளார்.

கப்பலில் சமையல்காரராக பணிபுரிந்து வந்ததால் வருமானம் மிகவும் குறைவாகவே கிடைத்துள்ளது. இதனால் வருமானத்தை பெருக்கிக்கொள்ள இருவரும் திட்டமிட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து விபச்சார தொழிலில் ஈடுப்படுவது என இருவரும் முடிவு செய்து இத்தொழிலை சில மாதங்கள் செய்து வந்துள்ளனர்.

இத்தொழில் காரணமாக இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வாடிக்கையாளர்களை சந்தித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், 2014-ம் ஆண்டு இருவரும் அவுஸ்திரேலியாவில் இருந்தபோது இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதே ஆண்டு அக்டோபர் மாதம் கணவர் மின்சார அலுவலகத்திற்கு தொடர்புக்கொண்டுள்ளார்.

அப்போது, ‘வீட்டில் மின்சாரம் மூலம் சமைத்துக்கொண்டு இருந்தபோது திடீரென மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. நீங்கள் உடனடியாக வந்து சரி பாருங்கள்’ என அழைத்துள்ளார்.

இவருடைய கோரிக்கையை பதிவு செய்துக்கொண்ட ஊழியர் வீட்டிற்கு வந்துள்ளார்.

‘சமையல் அறையில் முழு பன்றி ஒன்றை சமைத்துக்கொண்டு இருக்கிறேன். துர்நாற்றம் வந்தால் தாங்கிக்கொள்ளுங்கள்’ எனக் கூறியுள்ளார்.

ஆனால், சமையல் அறையை சுற்றி வினோதமான பொருட்கள் சிதறி கிடந்ததைக் கண்டு ஊழியர் அதிர்ச்சி அடைந்துள்ளார். மின்சார இணைப்பை சரி செய்துவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

பின்னர், வீட்டில் கண்டதை அப்படியே பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

தகவலை பெற்ற பொலிசார் சந்தேகத்தின் பேரில் பரிசோதனை செய்ய வந்துள்ளதாக நபரின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்போது, ‘நீங்கள் பரிசோதனை செய்யுங்கள். வீட்டிற்கு பின்புறம் நாய்களை கட்டிப்போட்டுள்ளேன். அவற்றை அவிழ்த்திவிட்டு வருகிறேன்’ எனக் கூறிவிட்டு கணவர் சென்றுள்ளார்.

ஆனால், பின்வழியாக சென்ற அவர் ஓர் அறையில் நுழைந்து தனது கழுத்தை கத்தியால் அறுத்துக்கொண்டார். ரத்தப்போக்கு அதிகம் ஏற்பட்டு அவர் அந்த அறையிலேயே உயிரிழந்துள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொலிசார் சமையல் அறையில் பரிசோதனை செய்தபோது அங்கு மனைவியின் உடல் வெட்டப்பட்டு சமையல் பாத்திரத்தில் கொதிக்கின்ற நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கொலை மற்றும் தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்பதால் இத்தகவலை பொலிசார் தற்போது தான் வெளியிட்டுள்ளனர்.

மேலும், இச்சம்பவத்திற்கு குடும்ப பிரச்சனையா அல்லது பிற காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து பொலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments