கொதிக்கும் தண்ணீரால் உயிரிழந்த குழந்தை: ஈவு இரக்கமில்லாத செயலை செய்த பெற்றோர்

Report Print Raju Raju in அவுஸ்திரேலியா
0Shares
0Shares
lankasrimarket.com

அவுஸ்திரேலியாவில் இரண்டு வயது மகளை கொதிக்கும் நீரில் குளிக்க வைத்த காரணத்தால் அக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் Brisbane நகரை சேர்ந்தவர் Shane David Stokes (30) இவர் மனைவி Nicole Betty More (23). இவர்களுக்கு Maddilyn-Rose (2) என்னும் மகள் உள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் Maddilynயின் பெற்றோர் அவரை கொதிக்கும் தண்ணீர் உள்ள தொட்டியில் குளிக்க வைத்துள்ளனர்.

இதில் சூடு தாங்காமல் திணறிய Maddilynக்கு கால், முதுகு என உடலில் பல இடங்களில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது.

காயங்களுடன் குழந்தை சில நாட்கள் அவதிப்பட்டு கொண்டிருக்க அதை பெற்றோர் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளனர்.

இதனிடையில் சில தினங்களுக்கு முன்னர் Maddilynக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து Maddilyn மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். குழந்தையின் உடலில் இருந்த காயங்களை பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் இது குறித்து பொலிசிற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனிடையில், சிகிச்சை பலனளிக்காமல் Maddilyn பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து, பொலிசார் குழந்தையின் பெற்றோரான Shane மற்றும் Nicole ஐ கைது செய்துள்ளனர்.

அவர்கள் மீது குழந்தையை கொலை செய்த குற்றம் மற்றும் சித்ரவதை செய்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது குறித்து புலானாய்வு அதிகாரி Tim Trezise கூறுகையில், குழந்தை உடலில் ஏகப்பட்ட காயங்கள் ஏற்பட்டும் அவரின் பெற்றோர் எந்த உதவியையும் யாரிடமும் கோரவில்லை.

கொதிக்கும் தண்ணீரால் தான் காயங்கள் ஏற்பட்டது என்பதை மட்டும் ஒத்து கொண்ட அவர்கள் இது ஒரு விபத்து என தெரிவித்ததாக கூறியுள்ளார்.

மேலும், Maddilynன் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அவரின் இறப்புக்கான சரியான காரணம் தெரியவரும் என Tim கூறியுள்ளார்.

Maddilyn வீட்டின் அருகில் வசிக்கும் Rhonda கூறுகையில், Maddilyn எப்போதும் சிரித்து கொண்டு மகிழ்ச்சியாக இருப்பார்.

குழந்தையை கடந்த புதன்கிழமை கடைசியாக பார்த்ததாக கூறியுள்ள Rhonda, Maddilyn வீட்டுக்கு ஆம்புலன்ஸ் வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments