நடுவானில் விமானத்தின் என்ஜினில் ஓட்டை: சாதுர்யமாக செயல்பட்ட விமானி

Report Print Peterson Peterson in அவுஸ்திரேலியா
0Shares
0Shares
lankasri.com
advertisement

அவுஸ்திரேலியா நாட்டில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமான என்ஜினில் ஓட்டை ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனா நாட்டிற்கு சொந்தமான China Eastern Airlines என்ற விமானம் நேற்று சிட்னி விமான நிலையத்தில் இருந்து சீனாவில் உள்ள ஷாங்காய் நகருக்கு புறப்பட்டுள்ளது.

advertisement

விமானம் புறப்பட்ட சில நிமிட நேரத்திற்கு பிறகு விமானத்தில் திடீரென வெடிச்சத்தம் கேட்டுள்ளது.

மேலும் விமானத்தின் இடது புறமுள்ள என்ஜினில் இருந்து வினோதமான சத்தும் எழுந்துள்ளது.

என்ஜின் பழுதாகிவிட்டதை அறிந்த விமானி உடனடியாக விமானத்தை திருப்பியுள்ளார்.

EPA

எவ்வித விபத்தும் இன்றி விமானம் சிட்னி நகரில் மீண்டும் பத்திரமாக தரையிறங்கியது. இச்சம்பவத்தில் பயணிகள் அனைவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை.

பயணிகள் அனைவரும் நேற்று இரவு சிட்னி நகரில் தங்க வைக்கப்பட்டனர். விமான என்ஜினில் ஓட்டை ஏற்பட்டது தொடர்பாக விமான நிறுவன அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

REUTERS

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments